தெலுங்கானா மாநிலம் நாகோலில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் சக வீரர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது குண்ட்லா ராகேச்ஷ் என்ற வீரர் உயிரிழந்தார். இவருக்கு வயது 25 மட்டுமே. இவர் சக வீரர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, ராகேஷ் சக வீரர் அடித்த இறகை மிஸ் செய்திருக்கிறார். அதை குனிந்து எடுக்கும்போது அவர் திடீரென கீழே விழுந்திருக்கிறார். இதில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராகேஷின் உயிரை காப்பாற்ற சக வீரர்கள் முயன்றும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர் கீழே விழந்தவுடன் அவர்கள் ராகேஷை தட்டி எழுப்பி உள்ளனர். அவர் கண் முழிக்காத நிலையில், சக வீரர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். பின்னர் மருத்துவர்கள் ராகேஷ் உயிர்ழந்ததாக கூறி உள்ளனர். ராகேஷ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தெலுங்கானாவில் விளையாடிக்கொண்டிருக்கும்போதே பேட்மிண்டன் வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாதாக தெலுங்கானாவில் 2023ஆம் ஆண்டில் சுமார் 10 பேர் இதுபோன்று திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி திருமண விழாவில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து பிப்ரவரி 22ஆம் தேதி உடற்பயிற்சி செய்யும்போது, 24 வயதான காவலர் ஒருவர் உயிரிழந்தார். பின்னர் அதே பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி திருமண விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவர் கீழே விழுந்து திடீர் மரணமடைந்தார். இப்படி அந்த மாதத்தில் மட்டும் 3, 4 இளைஞர்கள் திடீர் மரணமடைந்தனர்.
முந்தய காலத்தில் மாரடைப்பு என்பது 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கே இருக்கும். ஆனால், தற்போதெல்லாம் இளைஞர்களே மாரடைப்பால் திடீர் மரணமடைக்கின்றனர். ஏதேனும் ஒரு எடை அதிகம் உள்ள பொருட்களை தூக்கினால் கூட அவர்கள் மரணமடைகின்றனர். மாரடைப்புக்கான எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் நிகழும் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
மேலும் படிங்க: இந்த 4 வீரர்களை கழட்டிவிடும் மும்பை இந்தியன்ஸ்! ஏன் தெரியுமா?