லண்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஸ்காட்லாந்தில் உள்ள தனது இல்லத்துக்கு சென்றார். அங்கு அவரை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், தன்னுடைய மனைவி விக்டோரியாவுடன் சென்று சந்தித்தார். அப்போது, இஸ்ரேல் தாக்குதல் நீடித்து வருவதால், காசாவில் நிலவும் உணவு தட்டுப்பாட்டை போக்க அமெரிக்கா முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கெய்ர் ஸ்டார்மர் கேட்டுக்கொண்டார். இருவரும் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் சண்டை உள்பட 6 பெரிய போர்களை, தான் நிறுத்தி இருப்பதாக டிரம்ப் கூறினார். தான் தலையிடாவிட்டால், இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டையிட்டு கொண்டுதான் இருக்கும் என்று அவர் மீண்டும் கூறினார்.
Related Tags :