ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லை… இங்கிலாந்தின் பிளேயிங் 11 அறிவிப்பு – 4 மாற்றங்கள் என்னென்ன?

England Playing XI Announced: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடர் அதன் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டு. கடைசி மற்றும் 5வது டெஸ்ட் தொடர் நாளை (ஜூலை 31) நடைபெற இருக்கிறது. 

இங்கிலாந்து – இந்தியா அணிகள் (England vs India) இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த 5வது டெஸ்ட் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம், இந்தியா இந்த போட்டியை வென்றால் மட்டுமே ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை தக்கவைக்க முடியும். ஆட்டத்தை டிரா செய்தாலோ, தோற்றாலோ இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும்.

England vs India: இந்தியா என்ன செய்யும்?

அந்த வகையில், கோப்பையை வெல்ல இரு அணிகளும் அதிக முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4வது டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்திருக்கின்றன, நான்கு டெஸ்ட் போட்டிகளும் முழுமையாக நடைபெற்றுள்ளது, அதாவது ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் 5 நாள்கள் விளையாடப்பட்டுள்ளன. 4வது டெஸ்ட் போட்டி கடந்த ஜூலை 27ஆம் தேதிதான் நிறைவடைந்தது. 

அப்படியிருக்க, இந்திய அணிக்கும் சரி, இங்கிலாந்து அணிக்கு சரி காயத்தாலும், கடுமையான வேலைப்பளூவினாலும் சில வீரர்கள் இந்த 5வது போட்டியில் இருந்து விலகுவார்கள் என கூறப்பட்டது. இந்திய அணியை பொறுத்தவரை ரிஷப் பண்ட் (Rishabh Pant) காயம் காரணமாக ஏற்கெனவே விலகிவிட்டார். ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) இந்த போட்டியில் விளையாடுவாரா என்பதும் தெரியவில்லை. இந்திய அணி புதிய வீரர்களை உள்ளே கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. 

England vs India: பென் ஸ்டோக்ஸ் திடீர் விலகல்

அந்த வகையில், இங்கிலாந்து அணி வழக்கம்போல் அதன் பிளேயிங் லெவனை (England Playing XI) ஒரு நாள் முன்னதாக இன்றே வெளியிட்டுள்ளன. அதில் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5வது போட்டியில் வலது தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார். இது இங்கிலாந்து ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Ben Stokes will miss out on the final Test of the series with a right shoulder injury

And we’ve made four changes to our side 

— England Cricket (@englandcricket) July 30, 2025

கடந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து, சதம் அடித்திருந்தார் ஸ்டோக்ஸ். மேலும் கடந்த 2 போட்டிகளிலும் அவர்தான் ஆட்ட நாயகனும் கூட… பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) பேட்டிங்கில் 304 ரன்களை குவித்து, 17 விக்கெட்டுகளையும் சரித்துள்ளார். நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவரும் அவர்தான். அப்படியிருக்க அவர் காயம் காரணமாக விலகுவது இங்கிலாந்து அணிக்கும் பின்னடைவுதான். அவருக்கு பதில் ஒல்லி போப் கேப்டன்ஸியை கவனித்துக்கொள்வார்.

England vs India: இங்கிலாந்தின் 4 மாற்றங்கள் 

இங்கிலாந்து அணி அதன் பிளேயிங் லெவனில் மொத்தம் 4 மாற்றங்களை செய்திருக்கிறது. பென் ஸ்டோக்ஸ், லியம் டாவ்சன், ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் ஆகியோருக்கு பதில் ஜேக்கப் பெத்தல், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜாஸ் டங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் இல்லாத நிலையில் தற்போது அந்த இடத்திற்கு ஜேக்கப் பெத்தல் (Jacob Bethell) வந்துள்ளார் எனலாம். இடது கை சுழற்பந்துவீச்சாளரான இவர் இங்கிலாந்தின் மிடில் ஆர்டர் பேட்டிங்கிற்கும் பெரிய பலமாக இருப்பார். அதே நேரத்தில் கஸ் அட்கின்சனை கடந்த 4 போட்டிகளிலேயே இங்கிலாந்து களமிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடற்தகுதி காரணமாக அவர் விளையாடாமல் வந்தார். தற்போது முழு உடற்தகுதி பெற்று வந்திருக்கிறார். 

ஜேமி ஓவர்டன் (Jamie Overton) இங்கிலாந்தின் 4வது வேகப்பந்துவீச்சாளராக இருப்பார். அவர் பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளிப்பார். இதன்மூலம் இங்கிலாந்து நீண்ட பேட்டிங்கை வைத்திருக்கிறது எனலாம். முதலிரண்டு போட்டிகளில் விளையாடிய ஜாஸ் டங் (Josh Tongue) மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஒப்பீட்டளவில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சற்று பலம் பெற்றிருக்கிறது எனலாம். பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லாவிட்டாலும் கூட இந்திய அணி சற்று கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டியது அவசியமாகும். 

மேலும் படிக்க | Video: கோபத்தின் உச்சத்தில் கௌதம் கம்பீர்… மைதான ஊழியருடன் வாக்குவாதம் – காரணம் என்ன?

மேலும் படிக்க | இந்திய அணி வெற்றியை அடைய… இந்த 4 மாற்றங்களை கண்டிப்பாக செய்யணும்!

மேலும் படிக்க | ரிஷப் பண்டுக்கு பதில்… நாராயணன் ஜெகதீசன் தேர்வானது ஏன்? – காரணங்கள் இதோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.