IPL 2026 Trading: ஐபிஎல் 2025 தொடர் நிறைவடைந்து இன்னும் முழுமையாக இரண்டு மாதங்கள் ஆகவில்லை. அதற்குள் ஐபிஎல் 2026 மினி ஏலம் (IPL 2026 Mini Auction) குறித்த பேச்சுகளும், கணிப்புகளும் கிரிக்கெட் தளத்தில் அனல் பறந்து வருகின்றன. மினி ஏலம் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறும்.
ஐபிஎல் டிரேடிங் பேச்சுவார்த்தை அணிகளுக்கு இடையே நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பல முக்கிய வீரர்கள் அணி மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் டிரேட் செய்யப்படுகிறார் என ஐபிஎல் முடிந்ததுமே பேச்சுகள் வெளிவர தொடங்கி உள்ளன.
IPL 2026 Trading: கேஎல் ராகுல் அணி மாறுகிறாரா?
இந்நிலையில், தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் கேஎல் ராகுலை டிரேட் (KL Rahul IPL Trade) மூலம் பெற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி அணி கேஎல் ராகுலை ரூ.14 கோடி கொடுத்து மெகா ஏலத்தில் கொத்தாக தூக்கிய நிலையில், அவர் தனக்கு கேப்டன்ஸி பொறுப்பு வேண்டாம் என சொல்லிவிட்டு முழு நேர பேட்டராக மட்டும் அணியில் தொடர்ந்தார். 13 போட்டிகளில் 539 ரன்களை அடித்திருந்தார் கேஎல் ராகுல். அதில் மூன்று அரைசதமும், 1 சதமும் அடக்கம். அதிகபட்சமாக 112* ரன்களை அவர் அடித்திருந்தார்.
IPL 2026 Trading: கேஎல் ராகுலுக்கு இருக்கும் போட்டி
இந்தச் சூழலில், ஒரு இந்திய கேப்டன் மற்றும் இந்திய விக்கெட் கீப்பரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பல வருடங்களாக தேடி வருகிறது. தினேஷ் கார்த்திக் விடுவிக்கப்பட்ட பிறகு அந்த இடம் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை எனலாம். அப்படியிருக்க, அந்த இடத்தில் கேஎல் ராகுலை கொண்டுவர கேகேஆர் கடுமையாக முயற்சிக்கிறது. கடந்த மெகா ஏலத்திலும் கூட கேகேஆர் அணி கேஎல் ராகுலை எடுக்க ஆரம்பத்தில் முயற்சித்தது. ஆர்சிபி, டெல்லியின் கடுமையான போட்டிக்கு பிறகு அது ஏலம் கேட்கவில்லை. சிஎஸ்கேவும் கூட கேஎல் ராகுலை ஏலம் கேட்டது குறிப்பிடத்தக்கது.
IPL 2026 Trading: கேகேஆர் விடுவிக்கும் 3 வீரர்கள்
இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் இருந்து கேஎல் ராகுலை டிரேட் மூலம் பெற கேகேஆர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேஎல் ராகுலை கேகேஆர் தங்களின் அணிக்குள் கொண்டுர வேண்டும் என்றால் சில வீரர்களை விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த வகையில், கேஎல் ராகுலை டிரேட் மூலம் பெற கேகேஆர் அணி இந்த 3 வீரர்களை கட்டாயம் விடுவிக்கும்.
IPL 2026 Mini Auction: வெங்கடேஷ் ஐயர்
வெங்கடேஷ் ஐயரை கேகேஆர் அணி ரூ.23.75 கோடிக்கு மெகா ஏலத்தில் எடுத்தது. இவரை இவ்வளவு பெரிய தொகைக்கு அணியில் வைத்திருப்பதற்கு பதில் மினி ஏலத்திற்கு விடுவித்து, இதை விட குறைந்த தொகையில் எடுத்துக்கொள்ள கேகேஆர் திட்டமிடும். இதனால் கேஎல் ராகுலை டிரேட் மூலம் பெறுவதற்கும் இருப்புத் தொகை கிடைக்கும்.
IPL 2026 Mini Auction: குவின்டன் டி காக்
கேஎல் ராகுலை எடுக்கும்பட்சத்தில் அவர் ஓப்பனிங்கில்தான் விளையாட வேண்டும். அப்படியிருக்க சுனில் நரைன் ஒரு ஓப்பனர் என்பது ஏறத்தாழ உறுதி எனலாம். எனவே, விக்கெட் கீப்பர் பேட்டரான குவின்டன் டி காக்கை கேகேஆர் விடுவிக்க நினைக்கும். அவர் பெரியளவில் பார்மில் இல்லாத நிலையில் அவருக்கு பதில் கேஎல் ராகுலை எடுக்க நினைக்கும். அவரை ரூ.3.6 கோடிக்கு கேகேஆர் மெகா ஏலத்தில் எடுத்தது.
IPL 2026 Mini Auction: அஜிங்கயா ரஹானே
கேகேஆர் அணியின் தற்போதைய கேப்டன் இவர்தான். இவர் தலைமையில் கேகேஆர் கடுமையாக சொதப்பியது. பேட்டிங்கில் இவர் கைக்கொடுத்தாலும் கூட அடுத்தாண்டு எந்தளவிற்கு சிறப்பாக கைக்கொடுப்பார் என தெரியாது. அனுபவ வீரர் கேஎல் ராகுலை உள்ளே கொண்டுவரும்போது ஒரு துடிப்பான இளம் வீரரை கேகேஆர் எடுக்க நினைக்கும். எனவே அஜிங்கயா ரஹானேவை விடுவிக்கவே நினைக்கும். இவரை அவரது அடிப்படை தொகையான ரூ.1.5 கோடிக்கு கேகேஆர் எடுத்தது.
கேகேஆர் அணி தற்போது முழுமையாக மாற்றம் காண இருக்கிறது. கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணும் கேகேஆர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். 2025 சீசனிலேயே அபிஷேக் நாயர் கேகேஆர் முகாமிலும் இணைந்தார். பிராவோ ஆலோசகராக செயல்படுகிறார். இந்தச் சூழலில், கேகேஆர் அணி நிச்சயம் அடுத்த சீசனில் பெரிய பிளானுடன் களமிறங்கும்.
மேலும் படிக்க | கொல்கத்தா பயிற்சியாளரை தட்டி தூக்கும் சிஎஸ்கே! அவரும் விலகினார்
மேலும் படிக்க | வாஷிங்டன் சுந்தர் டிரேட் செய்யப்பட்டால்… இந்த 3 அணிகள் கடுமையாக போட்டிப்போடும்!
மேலும் படிக்க | விராட் கோலியை நீக்கி… இந்த வீரரை கேப்டனாக்க நினைத்த RCB – அவர் யார் தெரியுமா?