நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மாமீது ‘இம்பீச்மென்ட்!’

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மாமீது ‘இம்பீச்மென்ட்’  கொண்டு வரப்பட இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரஷ் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆக.21-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை மத்திய அரசு கொண்டுவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுதொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கட்சி உறுப்பினர்களிடமிருந்து கையொப்பங்கள் வாங்கப்பட உள்ளது. 2025 … Read more

இந்திய ரயில்வேயில் 6,238 டெக்னீசியன் காலிபணியிடங்கள்; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன பணி? டெக்னீசியன் கிரேடு-1 சிக்னல், டெக்னீசியன் கிரேடு 3 மொத்த காலி பணியிடங்கள்: 6,238 சம்பளம்: டெக்னீசியன் கிரேடு-1 சிக்னல் – ரூ.29,200; டெக்னீசியன் கிரேடு 3 – ரூ.19,900 வயது: டெக்னீசியன் கிரேடு-1 சிக்னல் – 18 – 33; டெக்னீசியன் கிரேடு 3 – 18 – 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) கல்வி தகுதி: பக்கம் 27 – 36 ரயில் எப்படி … Read more

வாளுக்குப் பதில் வேல்… திமுகவினரையும் திருப்பிவிட்ட பாஜக! – முருகனை தூக்கிப் பிடிக்கும் தமிழக அரசியல் களம்!

அரசியல் படுத்தும் பாடு, திமுக-வினரும் தங்களை அறியாமலேயே இப்போது முருகன் பெயரை உச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தளவுக்கு தமிழ்க் கடவுளாம் முருகனை முன்வைத்து இப்போது தமிழக அரசியல் களம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. 2021-ல் கருப்​பர் கூட்​டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாச​மாக சித்​தரித்​த​தாக சர்ச்சை வெடித்​து, அந்த சேனலைச் சேர்ந்த சுரேந்​திரன் உள்​ளிட்​ட​வர்​கள் கைது செய்​யப்​பட்​டார்​கள். இந்த விவ​காரத்​தைக் கையில் எடுத்த பாஜக கடுமை​யாக எதிர்​வினை​யாற்​றியது. அப்​போது பாஜக மாநில தலை​வ​ராக இருந்த … Read more

500% வரி அச்சுறுத்தல் குறித்து அமெரிக்காவிடம் கவலை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

வாஷிங்டன்: ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிப்பது தொடர்பாக எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்காவிடம் ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க அரசு ரஷ்யா மீதான தடை தொடர்பாக புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. குடியரசுக்கு கட்சி செனட்​டர் லிண்ட்சே கிரஹாம் ஆதர​வுடன் வெளிவந்​துள்ள இந்த மசோதா ரஷ்​யா​வுடன் தொடர்ந்து வர்த்​தகம் செய்​யும் நாடு​கள் மீது 500 சதவீத வரி … Read more

மாலி நாட்டில் பணியாற்றிய 3 இந்தியர்கள் கடத்தல்: பத்திரமாக மீட்க மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: மாலி நாட்டில் பணியாற்றிய 3 இந்தியர்கள் கடத்தப்பட்டு உள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்க மாலி அரசிடம் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டில் ராணுவத்துக்கும் அல்காய்தா ஆதரவு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. மாலி நாட்டின் மத்திய, மேற்கு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து அல்காய்தா ஆதரவு தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் … Read more

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் கடன் – தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்

Tamil Nadu govt loan : சென்னை மற்றும் தூத்துக்குடியில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் தொழில் தொடங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பறந்து போ விமர்சனம்: மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு… நம்மையும் பறக்க அழைக்கும் ராமின் உலகம்!

சென்னையில் மளிகை அங்காடி தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு ஓடிக்கொண்டிருக்கும் கோகுலை (சிவா), மாத இஎம்ஐ-க்களும் துரத்திக்கொண்டிருக்கின்றன. அவரின் மனைவியான குளோரி (கிரேஸி ஆண்டனி) தன் சேலை விற்பனை தொழிலால் ஓரளவிற்குக் குடும்பப் பணப் பிரச்னையைச் சமாளிக்கிறார். பெற்றோரின் இந்த இயந்திரத்தனமான பொருளாதார ஓட்டத்தால், அவர்களின் ஒரே மகனான அன்பு (மிதுல் ரயான்) பகல் வேளையில் பூட்டிய வீட்டிற்குள் தனிமையில் ஆன்லைன் க்ளாஸ்களோடு பொழுதைக் கழிக்கிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் இந்தத் … Read more

ஆகஸ்டில் தேர்வு: டைப்ரைட்டிங், சார்ட் ஹேன்ட் மற்றும் அக்கவுண்டன்ட் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்! அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் (டைப்ரைட்டிங், சார்ட் ஹேன்ட் மற்றும் அக்கவுண்டன்ட்)  தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் ஜுலை  28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டிருந்த அறிவிப்பில், தமிழ்நாடு அரசின்  தொழில்நுட்பக் கல்வித்துறை சார்பில் ஆண்டுக்கு இரண்டு முறை,     தட்டச்சு, சுருக்கெழுத்து … Read more

திருவள்ளூரில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் விசாரணை

சென்னை: காவல் நிலையத்தில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரத்தில் பேக்கரி நடத்தி வரும் சிவாஜி என்பவர், மதுமிதா என்பவருக்கு செல்போனில் தகாத வார்த்தைகளால் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுமிதா, கர்ப்பிணியான தனது தோழி செவ்வந்தி, தனம் ஆகியோருடன் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றுள்ளார். … Read more