தமிழ்நாடு அரசின் ‘இருதயம் காப்போம்’ திட்டத்தில் 18,000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை:  தமிழ்நாடு அரசின் ‘இருதயம் காப்போம்’ திட்டத்தின் கீழ்  18,000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.  “மருத்துவர் தினம் 2025” முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை சார்பில், வள்ளுவர் கோட்டத்தில்  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மருத்துவத்துறையில் மகத்தான பணி செய்த மருத்துவர்களை பாராட்டி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் … Read more

“அனாதை பிணம் போல கெடக்கட்டும்..'' – வெடி விபத்தில் நிவாரணம் கேட்டு போராடிய மக்களை மிரட்டிய எஸ்பி

சர்ச்சையான எஸ்.பி பேச்சு சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு படி ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை கேட்டு போராடியவர்களை பார்த்து, மாவட்ட எஸ்.பி கண்ணன் மிரட்டும் தொனியில் பேசி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. வெடி விபத்தில் 9 பேர் பலி விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கமல் குமார் என்பவருக்கு சொந்தமான கோகுலேஸ் பட்டாசு ஆலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு … Read more

நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் பண மோசடி வழக்கில் சிக்கியவர்கள்: திருப்புவனம் சம்பவத்தில் திடீர் திருப்பம்

மதுரை: போலீஸ் காவலில் கொலையான காவலாளி மீது நகை திருட்டு புகார் கூறிய தாய், மகள் மீது 14 ஆண்டுகளுக்கு முன்பு பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் இவ்வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையின்போது தாக்கியதில் கொலையானார். இவர் மீது திருட்டு புகார் அளித்த நிகிதா, அவரது தாயார் சிவகாமி அம்மாள் ஆகியோர் ஏற்கெனவே 2011-ல் அரசு வேலை வாங்கி … Read more

ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் தமால் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு

புதுடெல்லி: ரஷ்​யா​வின் கலினின்​கிரட் பகு​தி​யில் உள்ள யாந்​தர் கப்​பல் கட்​டும் தளத்​தில் நடை​பெற்ற விழா​வில் ஐஎன்​எஸ் தமால் என்ற புதிய போர்க்​கப்​பல் இந்​திய கடற்​படை​யில் இணைக்​கப்​பட்​டது. இந்​திய கடற்படை பயன்​பாட்​டுக்​காக போர்க்​கப்​பல்​கள் உள்​நாட்​டிலும், ரஷ்​யா​வில் தயாரிக்​கப்​படு​கின்​றன. எதிரி நாட்டு ரேடாரில் சிக்​காத துஷில் ரக போர்க்​கப்​பல்​களை ரஷ்​யா​வில் தயாரிக்க, இந்​திய பாது​காப்​புத்​துறை ஆர்​டர் கொடுத்​தது. இதில் பிரம்​மோஸ் ஏவு​கணை​கள் உட்பட 26 சதவீதம் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட பாகங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இந்த கப்​பல் ரஷ்​யா​வின் கலினின்​கிரட் பகு​தி​யில் உள்ள … Read more

அஜித்குமார் மீதான திருட்டு புகாரே பொய்யாக இருக்கலாம்… நிகிதாவால் பாதிக்கப்பட்டவர் சொல்வது!

Tamil Nadu Latest News: உயிரிழந்த அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதாவால் மோசடி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டதாக ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தப்படுகிறது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது, அரதன்படி  இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ளன.இவை சென்னை தவிர்த்து மற்ற 37 மாவட்டங்களில் பரவியுள்ளன. அவற்றில், அரியலூர் மாவட்டத்தில் குறைந்தபட்ச எண்ணிக்கையிலும் (2) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலும் (51) பேரூராட்சிகள் உள்ளன.  பேரூராட்சிகளில்  பல வகைப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில்,  தமிழ்நாடு அரசு 34 பேரூராட்சிகளை … Read more

Kids hair care: குழந்தைகளுக்கான தலைமுடி பராமரிப்பு டிப்ஸ்!

இப்போதெல்லாம் ஸ்கூல் படிக்கும்போதே இளநரை வந்துவிடுகிறது. அதனால், குழந்தைப்பருவத்தில் இருந்தே தலைமுடியை நன்கு பராமரிக்க வேண்டும் என்கிற சரும நோய் நிபுணர் சந்தன், அதற்கான டிப்ஸையும் பகிர்கிறார். Children hair care * மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களது சருமவகைக்கு ஏற்ப குழந்தை நல நிபுணரின் பரிந்துரையின் பேரில் ஷாம்பூ பயன்படுத்த வேண்டும். * ஒருநா‌ள்‌வி‌ட்டு ஒருநாளாவது குழ‌ந்தையைத் தலை‌க்குக் கு‌ளி‌க்கவை‌க்க வே‌ண்டு‌ம் * குழந்தைகளைக் குளிக்கவைக்க மிதமான சூடான வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும். அதிகமாகக் குளிர்ந்த … Read more

சீமானுக்கு எதிராக டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை

மதுரை: ​நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு எதி​ராக டிஐஜி வருண்​கு​மார் தொடர்ந்​துள்ள அவதூறு வழக்கு விசா​ரணைக்கு உயர் நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது. திருச்சி சரக டிஐஜி வருண்​கு​மார். இவர் திருச்சி மாவட்ட எஸ்​பி​யாக இருந்​த​போது, இவர் குறித்து சமூக வலை தளங்​களில் நாம் தமிழர் கட்​சி​யினர் அவதூறு கருத்​துகளை பதி​விட்​டனர். இதையடுத்து சீமானுக்கு எதி​ராக திருச்சி 4-வது நீதித்​துறை நடு​வர் மன்​றத்​தில் டிஜஜி வருண்​கு​மார் அவதூறு வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்​கின் விசா​ரணைக்கு தடை … Read more

இமாச்சலில் கனமழைக்கு 51 பேர் உயிரிழப்பு: இதுவரை 22 பேரை காணவில்லை

சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு நீடித்துவரும் நிலையில் இதுவரை பேர் 51 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேரைக் காணவில்லை. இமாச்சலில் கடந்த 10 நாட் களுக்கும் மேலாக பெய்துவரும் பருவ மழையால் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இமாச்சலபிரதேச வருவாய் துறையின் கீழ் இயங்கி வரும் மாநில அவசர உதவி மையம் (எஸ்இஓசி) ஒட்டுமொத்த சேத மதிப்பீட்டு அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி … Read more

கட்டணத்தை இரு மடங்காக்கும்  ஊபர், ஓலா நிறுவனங்கள் : பயணிகள் அதிர்ச்சி

மும்பை ஓலா, ஊபர் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை இருமடங்காக்க அரசு அனுமதி அளித்துள்ளது/   நாளுக்கு நாள் ஓலா, ஊபர் செயலிகள் மூலமாக வாகனங்களை புக் செய்து பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செயலியில் நாம் செல்லும் இடத்தை இந்த செயலியில் கிளிக் செய்தால், ஆட்டோ, கார் என எதில் போக விருப்பமோ.. அதில் புக் செய்து பயணிக்கலாம். கட்டனத்தையும் ஆன்லைனிலேயே செலுத்த முடியும். இதற்கு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வாடகை கார் டிரைவர்களிடம் ஓலா, ஊபர் … Read more