பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் ஓபிஎஸ்

சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தார். இதை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீண்ட காலமாக பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், பாஜக தலைமை அவரிடம் பாராமுகமாக இருந்த நிலையில்கூட, நாங்கள் பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம் என கூறி வந்தார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி … Read more

காங்கிரஸின் ‘இந்து பயங்கரவாதம்’ சதி முறியடிக்கப்பட்டுள்ளது: மாலேகான் தீர்ப்பு குறித்து பாஜக கருத்து

புதுடெல்லி: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் இந்து பயங்கரவாதம் எனும் சதி முறியகடிக்கப்பட்டுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேரும் விடுவிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத், “காங்கிரஸின் இந்து பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவருக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை. … Read more

சுர்ஜித்தின் தாயை கைது செய்வதில் என்ன தயக்கம்… திமுக அரசையும் விட்டுவைக்காத திருமா!

Thirumavalavan Press Meet: நெல்லை கவின் கொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்றும் சாதி விட்டு சாதி திருமணம் செய்வதற்காக பெற்ற பிள்ளையே கொலை செய்வதை தேசிய அவமானமாக கருத வேண்டும் என்றார்.

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு! பெங்களூருவில் இளம்பெண் கைது

பெங்களூரு: அல்கொய்தா  பயங்கரவாத  அமைப்​புடன் தொடர்​புடைய 30 வயது பெண் பெங்​களூரு​வில் கைது செய்​யப்​பட்​டார்.  இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  சமா பர்வீன், இந்தியாவில் ‘அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் மூளையாக’ இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் அல்காய்தா தீவிர​வாத அமைப்​பின் சித்​தாந்​ததை விதைக்​கும் நோக்​கில் முஸ்​லிம் இளைஞர்​களைத் தூண்​டி​விட்டு இந்​திய அரசுக்கு எதி​ராக வன்​முறை​யில் ஈடு​படு​வதாக குஜ​ராத் தீவிர​வாத ஒழிப்பு படை​க்கு மின் அஞ்சல் வந்தது. இதையடுத்து சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைக்​கப்​பட்​டது. இந்த குழு​வினர் கடந்த … Read more

அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், பணியிலிருந்து ஓய்வுபெறும் கடைசி நாளில் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. நாகர்கோவிலைச் சேர்ந்த வேல்ராஜ் 1992-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக கிண்டி இன்ஜினீயரிங் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றிய வேல்ராஜ், 2004 முதல் 2010 வரை துணை இயக்குநராகவும், 2010 முதல் 2013 வரை இயக்குநராகவும், 2013-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் (institute for energy studies) இயக்குநராகவும் பணியாற்றி வந்தார். அண்ணா … Read more

தாராபுரத்தில் கொலையான வழக்கறிஞர் உடலை பெற 3-ம் நாளாக உறவினர்கள் மறுப்பு

தாராபுரத்தில் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை சேர்க்க வலியுறுத்தி, 3-ம் நாளாக உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். தாராபுரம் முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். தாராபுரத்தில் தனியார் பள்ளி ஆக்கிரமிப்பு தொடர்பான புகாரில், ஆய்வு சென்றபோது பள்ளி வளாகத்தில் முருகானந்தத்தை மர்ம கும்பல் கொலை செய்து விட்டு தப்பியது. இது தொடர்பாக சித்தப்பாவும், பள்ளித் தாளாளருமான தண்டபாணி (61) என்பவர் உட்பட … Read more

வரி விதிப்பு நடவடிக்கை, கச்சா எண்ணெய் குறித்து ட்ரம்ப் விமர்சனம்: ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் மோடி ஆலோசனை

புதுடெல்லி: இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுடன் இணைந்து தெற்காசியாவிலேயே மிக பெரிய கச்சா எண்ணெய் கிடங்கு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பு இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க … Read more

விவோ T4R ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்தியாவில் விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி4ஆர் ஸ்மார்ட்போன் … Read more

ஆக. 6 வரை இங்கெல்லாம் மழை அடிச்சு ஊத்த போகுது.. வானிலை மையம் அலர்ட்!

Heavy rain districts: தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

Ind vs Eng: கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு.. இதுதான் காரணமா?

Ind vs Eng 5th Test: இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் இங்கிலாந்து அணி முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்றது. மான்செஸ்டரில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டி டிராவானது. இந்த நிலையில், இந்த இரு அணிகளும் தங்களின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் … Read more