Month: July 2025
திருவள்ளூரில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
சென்னை: காவல் நிலையத்தில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரத்தில் பேக்கரி நடத்தி வரும் சிவாஜி என்பவர், மதுமிதா என்பவருக்கு செல்போனில் தகாத வார்த்தைகளால் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுமிதா, கர்ப்பிணியான தனது தோழி செவ்வந்தி, தனம் ஆகியோருடன் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றுள்ளார். … Read more
அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் மல்லசந்திரா கிராமத்தைச் சேர்ந்த ரவிஷா கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கி அதை ஓட்டிச் சென்ற ரவிஷா உயிரிழந்தார். இதையடுத்து ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் … Read more
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 94 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
டெல் அவிவ்: காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் இரவு நடத்திய வான்வழி தாக்குதலில், உதவிபெற காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல் பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸ் தீவிரவாதிகள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களை விடுதலை செய்துவிட்டு இருதரப்பும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். காசாவில் 60 நாள் சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதை ஹமாஸ் … Read more
ஈரோடு, திருச்சி, ராமநாதபுரத்தில் அரசு அலுவலகத்தில் வேலை! முழு விவரம் இங்கே
Tamil Nadu govt jobs : தமிழ்நாட்டில் ஈரோடு, திருச்சி, ராமாநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான டிராஸ்பார்மர் ஊழல் வழக்கு! தமிழக அரசுக்கு ஒரு வாரம் கெடு
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது, டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அறப்போர் இயக்கம் வழக்கில், ஒரு வாரத்தில், தமிழ்நாடு அரசு பதில் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ரூ397 கோடிக்கு முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். … Read more
“ChatGPT உதவியால் ரூ.10 லட்சம் கடனை அடைத்துவிட்டேன்..'' – குடும்பத் தலைவியின் அனுபவப் பகிர்வு!
இப்போதைய உலகின் மந்திரச் சொல் ‘AI, ChatGPT’. இதை முறையாகவும், சரியாகவும் பயன்படுத்தினால், நம்முடைய தினசரி நாளில் வெற்றிகரமான பல காரியங்களை சாதித்துக்கொள்ள முடியும். இதை அன்றாட தேவைகளுக்கு மட்டுமல்ல, நம்முடைய சில பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை வழங்கும் இடமாகவும் ChatGPT போன்ற உபகரணங்கள் இருக்கின்றன. அப்படி அமெரிக்காவில் ஒரு பெண் ChatGPT உதவியுடன் சுமார் ரூ.10 லட்சம் வரை கடனை அடைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அமெரிக்க செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்டவை… Chat GPT ரூ19.7 லட்சம் … Read more
கோவையில் 7-ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் இபிஎஸ்: பாஜக தலைவர்கள் பங்கேற்க அதிமுக அழைப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஜூலை 7-ம் தேதி கோவையில் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பாஜக தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பழனிசாமி அறிவித்திருந்தார். பல்வேறு காரணங்களால் சுற்றுப்பயணம் தள்ளிப்போனது. இந்நிலையில் `மக்களை காப்போம்- தமிழகத்தை மீட்போம்’ என்ற தொடர் பிரச்சார சுற்றுப்பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவையில் தொடங்குவதாக பழனிசாமி அறிவித்துள்ளார். நிர்வாகிகள் ஏற்பாடு: முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் … Read more
நிலச்சரிவால் கேதார்நாத் யாத்திரை நிறுத்தம்
ருத்ரபிரயாக்: கனமழை காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் சோன்பிரயாக் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால், கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் சோன்பிரயாக் அருகேயுள்ள முங்காட்டியா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேதார்நாத் யாத்திரையை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கவுரிகுந்த் பகுதியிலிருந்து திரும்பிய சில பக்தர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கினர். அவர்களை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டு சோன்பிரயாக் அழைத்து வந்தனர். … Read more
10 ஆண்டுக்கான பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா-அமெரிக்கா இடையே உடன்பாடு
புதுடெல்லி: அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஹெக்செத் மற்றும் ராஜ்நாத் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து 10 ஆண்டுக்கான அமெரிக்க – இந்திய பாதுகாப்பு கட்டமைப்பில் இருவரும் கையெழுத்திட ஒப்புக்கொண்டனர். இவ்வாண்டு நடைபெறவுள்ள சந்திப்பின்போது இந்த பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க பாதுகாப்பு தளவாட விற்பனை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான பாதுகாப்பு மற்றும் தொழில் … Read more