பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்ட ஓ பி எஸ்

சென்னை தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்கிறார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் முக்கிய தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம். :அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொண்டது. அடுத்ததாக, தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் … Read more

“நீதிபதிக்கு எதிராக புகார் அளித்ததால் என் உயிருக்கு ஆபத்து…” – வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

மதுரை: உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகப் புகார் அளித்ததால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்தார். மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் ஒன்றை அனுப்பினார். இப்புகார் மனு பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரை மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் விசாரணைக்காக ஆஜராக … Read more

இந்திய பொருளாதாரம் உயிரற்றது என்பது பிரதமர், நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும்: ராகுல் காந்தி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர்த்த மற்ற அனைவருக்கும் இந்திய பொருளாதாரம் உயிரற்றது என்பது தெரியும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியாவும் ரஷ்யாவும் உயிரற்ற பொருளாதாரங்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “அவர் சொன்னது சரியானதுதான். பிரதமர், நிதி அமைச்சர் … Read more

13 வயசு சிறுமிக்கு… 40 வயசு ஆணுடன் கல்யாணம் – குழந்தை திருமணத்திற்கு வறுமை காரணமில்லையாம்!

Child Marriage: 13 வயது சிறுமிக்கும், 40 வயதான அதுவும் ஏற்கெனவே திருமணமான நபருக்கும் இடையே குழந்தை திருமணம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தடை செய்யப்படுமா? அதிமுக மனு! உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு

Nalam Kaakum Stalin Scheme: நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் போட்ட உத்தரவு மற்றும் வழக்கு பின்னணி குறித்து முழுத் தகவல்.

கேஎல் ராகுலை கொக்கிப் போட்டு தூக்க… KKR கழட்டிவிடும் இந்த 3 ஸ்டார் வீரர்கள்!

IPL 2026 Trading: ஐபிஎல் 2025 தொடர் நிறைவடைந்து இன்னும் முழுமையாக இரண்டு மாதங்கள் ஆகவில்லை. அதற்குள் ஐபிஎல் 2026 மினி ஏலம் (IPL 2026 Mini Auction) குறித்த பேச்சுகளும், கணிப்புகளும் கிரிக்கெட் தளத்தில் அனல் பறந்து வருகின்றன. மினி ஏலம் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறும்.  ஐபிஎல் டிரேடிங் பேச்சுவார்த்தை அணிகளுக்கு இடையே நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பல முக்கிய வீரர்கள் அணி மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, சஞ்சு சாம்சன் … Read more

BNSS பிரிவு 35ன் கீழ் நோட்டீஸ்களை வாட்ஸ்அப் மூலம் வழங்கக்கூடாது… நேரடியாக வழங்க காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 35 இன் கீழ் காவல்துறையினரால் வெளியிடப்பட்ட அறிவிப்பை சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, வாட்ஸ்அப் வழியாக அல்லாமல், நேரடியாக மட்டுமே வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, அத்தகைய அறிவிப்புகளை வழங்குவதற்கு வாட்ஸ்அப் அல்லது பிற மின்னணு தகவல்தொடர்புகளைப் பயன்படுத்துவதை நிராகரித்தது, சேவை முறை ஒரு தனிநபரின் சுதந்திரத்தில் நேரடி தாக்கங்களை ஏற்படுத்துகிறது மற்றும் சமரசம் … Read more

'STALIN-OPS' புது கூட்டணி, பதற்றத்தில் BJP & EPS?! அரசியல் ட்விஸ்ட்! | Elangovan Explains

ஒரே நாளில் ‘பிரேமலதா விஜயகாந்த் – மு.க ஸ்டாலின், ஓ.பி.எஸ்-மு.க ஸ்டாலின், கவின் குடும்பம்- கனிமொழி’ என மூன்று முக்கிய சந்திப்புகள் நிகழ்ந்துள்ளது. மாலையில் மீண்டும், மு.க ஸ்டாலினை அவர் வீட்டிலேயே சந்தித்துள்ளார் ஓபிஎஸ். ஒரு பக்கம் ‘பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழை செய்துவிட்டார் ஜெயலலிதா’ என கடம்பூர் ராஜு சர்ச்சை பேச்சு. அதற்கு ‘அது வரலாற்று புரட்சி’ என ஓபிஎஸ் கடும் அட்டாக். மேலும் ‘பாஜக-வாகவே மாறிக் கொண்டிருக்கும் அதிமுக’ என கடுமையான விமர்சனம். … Read more

“அதிமுக சாதி, மதம் இல்லாத கட்சி” – எடப்பாடி பழனிசாமி

ராமநாதபுரம்: “அதிமுக ஆட்சியில் மதச்சண்டை, சாதிச்சண்டை இல்லை, இப்போது கலவர பூமியாகிவிட்டது. அதிமுக சாதி, மதம் இல்லாத கட்சி” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ராமநாதபுரத்தில் இன்று பொதுமக்களிடையே பேசியது: “திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் ஆகியும் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. 525 அறிவிப்புகளில் 10% மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பத்திரப்பதிவில் … Read more