ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் கடன் – தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்

Tamil Nadu govt loan : சென்னை மற்றும் தூத்துக்குடியில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் தொழில் தொடங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பறந்து போ விமர்சனம்: மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு… நம்மையும் பறக்க அழைக்கும் ராமின் உலகம்!

சென்னையில் மளிகை அங்காடி தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு ஓடிக்கொண்டிருக்கும் கோகுலை (சிவா), மாத இஎம்ஐ-க்களும் துரத்திக்கொண்டிருக்கின்றன. அவரின் மனைவியான குளோரி (கிரேஸி ஆண்டனி) தன் சேலை விற்பனை தொழிலால் ஓரளவிற்குக் குடும்பப் பணப் பிரச்னையைச் சமாளிக்கிறார். பெற்றோரின் இந்த இயந்திரத்தனமான பொருளாதார ஓட்டத்தால், அவர்களின் ஒரே மகனான அன்பு (மிதுல் ரயான்) பகல் வேளையில் பூட்டிய வீட்டிற்குள் தனிமையில் ஆன்லைன் க்ளாஸ்களோடு பொழுதைக் கழிக்கிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் இந்தத் … Read more

ஆகஸ்டில் தேர்வு: டைப்ரைட்டிங், சார்ட் ஹேன்ட் மற்றும் அக்கவுண்டன்ட் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்! அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் (டைப்ரைட்டிங், சார்ட் ஹேன்ட் மற்றும் அக்கவுண்டன்ட்)  தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் ஜுலை  28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டிருந்த அறிவிப்பில், தமிழ்நாடு அரசின்  தொழில்நுட்பக் கல்வித்துறை சார்பில் ஆண்டுக்கு இரண்டு முறை,     தட்டச்சு, சுருக்கெழுத்து … Read more

திருவள்ளூரில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் விசாரணை

சென்னை: காவல் நிலையத்தில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரத்தில் பேக்கரி நடத்தி வரும் சிவாஜி என்பவர், மதுமிதா என்பவருக்கு செல்போனில் தகாத வார்த்தைகளால் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுமிதா, கர்ப்பிணியான தனது தோழி செவ்வந்தி, தனம் ஆகியோருடன் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றுள்ளார். … Read more

அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் மல்லசந்திரா கிராமத்தைச் சேர்ந்த ரவிஷா கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கி அதை ஓட்டிச் சென்ற ரவிஷா உயிரிழந்தார். இதையடுத்து ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் … Read more

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 94 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

டெல் அவிவ்: காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் இரவு நடத்திய வான்வழி தாக்குதலில், உதவிபெற காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல் பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸ் தீவிரவாதிகள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களை விடுதலை செய்துவிட்டு இருதரப்பும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். காசாவில் 60 நாள் சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதை ஹமாஸ் … Read more

ஈரோடு, திருச்சி, ராமநாதபுரத்தில் அரசு அலுவலகத்தில் வேலை! முழு விவரம் இங்கே

Tamil Nadu govt jobs : தமிழ்நாட்டில் ஈரோடு, திருச்சி, ராமாநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான டிராஸ்பார்மர் ஊழல் வழக்கு! தமிழக அரசுக்கு ஒரு வாரம் கெடு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது, டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அறப்போர் இயக்கம்  வழக்கில், ஒரு வாரத்தில், தமிழ்நாடு அரசு பதில் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ரூ397 கோடிக்கு முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். … Read more

“ChatGPT உதவியால் ரூ.10 லட்சம் கடனை அடைத்துவிட்டேன்..'' – குடும்பத் தலைவியின் அனுபவப் பகிர்வு!

இப்போதைய உலகின் மந்திரச் சொல் ‘AI, ChatGPT’. இதை முறையாகவும், சரியாகவும் பயன்படுத்தினால், நம்முடைய தினசரி நாளில் வெற்றிகரமான பல காரியங்களை சாதித்துக்கொள்ள முடியும். இதை அன்றாட தேவைகளுக்கு மட்டுமல்ல, நம்முடைய சில பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை வழங்கும் இடமாகவும் ChatGPT போன்ற உபகரணங்கள் இருக்கின்றன. அப்படி அமெரிக்காவில் ஒரு பெண் ChatGPT உதவியுடன் சுமார் ரூ.10 லட்சம் வரை கடனை அடைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அமெரிக்க செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்டவை… Chat GPT ரூ19.7 லட்சம் … Read more