“தேச நலனை காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” – அமெரிக்க வரி விதிப்பு பற்றி பியூஷ் கோயல் கருத்து

புதுடெல்லி: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், நாட்டின் நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய பியூஷ் கோயல், “பரஸ்பர வரிகள் குறித்த நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி பிறப்பித்தார். ஏப்ரல் 5 முதல் 10% அடிப்படை வரி அமலில் உள்ளது. அந்த 10% அடிப்படை வரியுடன் மொத்தம் … Read more

அசத்தலான 4 ஜட்ஜ்கள்.. களைகட்டபோகும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11!

Super Singer Senior Season 11: சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், நிகழ்ச்சியின் ஜட்ஜ்கள் யார் யார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கம்பீர் – சுப்மான் கில் செய்த 2 பெரிய தவறுகள்… இந்திய அணியில் தொடரும் சொதப்பல்கள்!

India vs England 5th Test: இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூலை 31) தொடங்கியது. இங்கிலாந்து அணி தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் சூழலில், இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தக்கவைக்க இயலும்.  இந்நிலையில், இன்று தொடங்கிய 5வது போட்டியிலும் இந்திய அணி கேப்டன் சுப்மான் கில் (Shubman Gill) டாஸை தோற்றார். … Read more

10 ஆண்டுகளில் 5892 அமலாக்கத்துறை  வழக்குகள் : 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை

டெல்லி கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை தொடர்ந்த 5892 வழக்குகளில் 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை அடக்க பாஜக அரசு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.  ஆனால் இதை மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில் திருணாமுல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகேத் கோகலே அமலாக்கத்துறையின் வழக்குகள் எத்தனை நிலுவையில் உள்ளன எனவும் இவற்றில் எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும் வழக்குகளின் தற்போதைய நிலவரம் குற்த்தும் கேள்வி எழுப்பி உள்ளார். … Read more

OPS: "தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம்"-மு.க.ஸ்டாலின் சந்திப்புக் குறித்து ஓ.பி.எஸ்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை அடையாறு பார்க்கில் வாக்கிங் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அடுத்த சில மணிநேரங்களில், அவரின் அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக்கு கூட்டத்துக்குப் பிறகு, அதன் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜக கூட்டணியிலிருந்து தாங்கள் வெளியேறுவதாக அறிவித்தார். அடுத்த சில மணிநேரங்களில் மாலையில் ஆழ்வார்பேட்டையில் ஸ்டாலினை அவரது இல்லத்தில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார். ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு இந்த சந்திப்பைத் … Read more

“அரசியலில் எதுவும் நடக்கலாம்” – முதல்வர் ஸ்டாலினை 2-வது முறையாக சந்தித்த ஓபிஎஸ் கருத்து

சென்னை: முதல்வர் ஸ்டாலினை இன்று இரண்டாவது முறையாக சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம்” என தெரிவித்துள்ளார். பாஜக தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் . இதன் எதிரொலியாக, தனது அரசியல் வாழ்க்கையில் முதன்முறையாக பாஜகவுக்கு எதிராக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதன் தொடர்ச்சியாக, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை கொண்டிருந்த உறவை அதிமுக தொண்டர்கள் … Read more

Bihar SIR | தேர்தல் ஆணைய தலைமையகம் நோக்கி பேரணி செல்ல இண்டியா கூட்டணி திட்டம்!

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்ல இண்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது முதல், இந்த விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் நாள்தோறும் போராட்டங்களை இண்டியா … Read more

ஆதார் கார்டு கூட வேலைக்கு ஆகாது… உங்களை இந்திய குடிமக்கள் என நிரூபிக்கும் இந்த 11 ஆவணங்கள்!

Proof Of Citizenship: இந்திய நாட்டின் குடிமக்கள் என நிரூபிக்க ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லாத இந்த 11 ஆவணங்களை சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் ஒரு லாக்கப் மரணமா? மூடி மறைக்க முயற்சி.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Lockup Deaths: தமிழக அரசு லாக்கப் மரணங்களை முடி மறைப்பதை அனுமதிக்க முடியாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.