பெண்ணை கொன்று குப்பை லாரியில் உடலை வீசிய காவலாளி கைது

பெங்களூரு, பெங்களூரு சி.கே. அச்சுக்கட்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஸ்கேட்டிங் மைதானம் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த மாநகராட்சியின் குப்பை லாரியில் ஒரு பெண்ணின் உடல் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டு இருந்தது. அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி சி.கே.அச்சுக்கட்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண் உளிமாவு பகுதியைச் சேர்ந்த ஆஷா என்ற புஷ்பா(வயது 39) என்பது தெரியவந்தது. மேலும் அவரது உடல் அடங்கிய சாக்கு மூட்டையை ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் … Read more

2-வது 20 ஓவர் கிரிக்கெட் : இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இன்று மோதல்

பிரிஸ்டல், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 97 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் … Read more

பாகிஸ்தான்: பருவமழைக்கு கடந்த 24 மணிநேரத்தில் 18 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதில், கடந்த 24 மணிநேரத்தில் 11 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். மழை தொடர்பான சம்பவங்களில் 57 பேர் காயமடைந்தனர். இதனை மாகாண பேரிடர் மேலாண் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. பழைய கட்டிடங்கள் மற்றும் அவற்றை மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என அதுபற்றி இன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இதில், … Read more

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: படுத்தே விட்ட பாகிஸ்தான்… கெஞ்சினாலும் உறுதியாக இருக்கும் மோடி அரசு!

Indus Water Treaty: பகல்ஹாம் தாக்குதலை தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிடம் அதனை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை விடுத்து வருகிறது.

Shoe collection: தேவைக்கு அதிகமாக ஷூ வாங்கிக் குவிக்கும் மக்கள்; இதன் பின்விளைவு என்ன தெரியுமா?

நான் பயன்படுத்தும் ஷூக்கள் பழசானதும் அதனை குப்பைத்தொட்டியில் தூக்கி எறிகிறோம். இவ்வாறு எறியும் ஷூக்களால் மனிதர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து நம்மில் பலருக்கும் தெரியாது. இந்தியாவைப் பொறுத்தவரை 65% காலணிகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக ஆக்ராவில் ஒரு நாளைக்கு 10 லட்சம் ஜோடி ஷூக்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் பல டன் கழிவுகள் வெளி வருகின்றன. ஷூக்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களில் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்ய முடியாதவையாக உள்ளன. இப்படி மறுசுழற்சி செய்ய முடியாத அளவிற்கு உற்பத்தி செய்யப்படும் … Read more

காவல்நிலைய மரணம் எதிரொலி: சிவகங்கை எஸ்பி ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு விவகாரத்தில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், கூடுதலாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பையும் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன் 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் … Read more

தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. எனினும், இதுவரை 4 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பஷமைலாரம் பகுதியில் சிகாச்சி ரசாயன தொழிற்சாலை கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு மைக்ரோ கிறிஸ்டலைஸ் செல்லுலாஸ் எனும் ரசாயன பவுடர் தயாரிக்கப்பட்டு வருகிறது. 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் … Read more

பயில்வான் ரங்கநாதனுக்கு எச்சரிக்கை விடுத்த விஷால் மற்றும் கார்த்தி! ஏன் தெரியுமா?

South Indian Artistes Association: பயில்வான் ரங்கநாதன் நடிகர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்புகிறார் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. 

இனி கேப்டன் கூல் என்ற வார்த்தை தோனிக்கு தான் சொந்தம்.. டிரேட் மார்க் வாங்கியாச்சு!

Captain Cool: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவரை செல்லமாக அவரது ரசிகர்கள் கேப்டன் கூல் என கூறுவது வழக்கம். எந்த மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும், நிதானமாக பதற்றமின்றி களத்தில் முடிவுகளை எடுப்பதால், இவ்வாறு அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். களத்தில் முடிவெடுப்பது மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் பதற்றமின்றி கடைசி வரை நின்று வெற்றியை பெற்று தருவார். அப்படி இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்.  குறிப்பாக 2011 ஒருநாள் உலக கோப்பை … Read more

Dhanush: சூடு பிடிக்கும் 'இட்லி கடை'. மீண்டும் ஒரு இந்திப் படம் – தனுஷ் படங்கள் பரபர அப்டேட்

தனுஷுக்கு இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல். தமிழ்,தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து பல மொழிகளில் ஓடிக்கொண்டிருந்தார். சமீபத்தில் ‘குபேரா’ திரைக்கு வந்தது. பாலிவுட்டில் தனுஷ் நடித்து வரும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. இந்தப் படம் இந்தாண்டு நவம்பர் இறுதியில் வெளியாகும் என்கிறார்கள். தமிழில் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படம், அக்டோபர் முதல் தேதியன்று வெளியாகிறது. ஆக, இந்தாண்டில் தனுஷுக்கு மூன்று படங்கள் என வைத்துக்கொள்ளலாம். இந்தி படப்பிடிப்பில் தனுஷ் … Read more