மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்பு விதிகள் அறிவிப்பு: புதிய இணையத்தில் வக்பு சொத்துகள் பதிவு செய்வது கட்டாயம்

புதுடெல்லி: கடந்த நாடாளு​மன்ற கூட்​டத்​தொடரில் வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்​றப்​பட்​டது. இதை எதிர்த்து பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் மற்​றும் முஸ்​லிம் அமைப்​பு​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்​திருந்​தன. விசா​ரணை​யின்​போது, புதிய வக்பு சட்​டத்​தில் முஸ்​லிம் அல்​லாதவர்​களை​யும் குழுக்​களில் சேர்ப்​பது உள்​ளிட்ட சில அம்​சங்​கள் மீது நீதிப​தி​கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்​து, மத்​திய அரசு தாமாகவே முன்​வந்து சர்ச்​சைக்​குரிய அம்​சங்​களை வழக்கு முடி​யும் வரை அமல்​படுத்​த​மாட்​டோம் என உத்​தர​வாதம் அளித்​திருந்​தது. இதனால், சில அம்​சங்​களுக்​கான தடை​யுடன் புதிய … Read more

உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்புவோம்: டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்: உக்ரைனுக்கு அமெரிக்கா கூடுதல் ஆயுதங்களை குறிப்பாக தற்காப்பு ஆயுதங்களை அனுப்பும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று (திங்கள் கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்த ட்ரம்ப், “நாங்கள் கூடுதல் ஆயுதங்களை அனுப்ப வேண்டி இருக்கும். குறிப்பாக தற்காப்பு ஆயுதங்கள். அவர்கள் (உக்ரைன்) மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். (ரஷ்ய அதிபர்) புதினின் செயல் மகிழ்ச்சி அளிக்கவில்லை.” … Read more

"கேட் ஏற்கனவே திறந்துதான் இருந்தது".. கடலூர் விபத்தில் காயமடைந்த டிரைவர்!

ரயில்வே கேட் ஏற்கனவே திறந்து இருந்ததாகவும் கேட் கீப்பரை தான் பார்க்க கூட இல்லை என்றும் கடலூர் விபத்தில் காயமடைந்த டிரைவர் சங்கர் கூறி உள்ளார். 

Rashmika: 'ராஷ்மிகா சொல்வதால் அது உண்மையாகிவிடாது!' – ராஷ்மிகாவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் ‘குபேரா’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தின் ரிலீஸை முடித்த உடனே தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் வேலைகளுக்கு நகர்ந்துவிட்டார் ராஷ்மிகா. தற்போது, ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்த விஷயத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. Rashmika Mandana – Kubera சமீபத்திய பேட்டியில் ராஷ்மிகா மந்தனா, “எங்களுடைய கொடவா சமூகத்திலிருந்து எனக்கு முன் சினிமாவிற்குள் யாரும் வந்ததில்லை. எங்கள் சமூகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த முதல் நபர் நான்தான் என நினைக்கிறேன்.” எனக் கூறியிருந்தார். ராஷ்மிகாவின் … Read more

Amazon Prime Day 2025: லேப்டாப்பில் 80% வரை தள்ளுபடி, இன்னும் பல அதிரடி சலுகைகள்

Amazon Prime Day Sale 2025: அமேசானின் பிரைம் டே சேல் 2025 ஜூலை 12 முதல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறும். இந்த மூன்று நாள் விற்பனையில், மடிக்கணினிகளில் மிகப்பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் ஒரு மாணவராக இருந்தாலும் சரி, தொழில்முறை நிபுணராக இருந்தாலும் சரி, கேமிங் பிரியராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் சிறந்த மடிக்கணினி சலுகைகள் கிடைக்கும். இந்த விற்பனையில், ICICI மற்றும் SBI கார்டுகளுடன் பணம் செலுத்தினால் 10% உடனடி தள்ளுபடி, … Read more

கடலூர் ரயில் விபத்துக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்

சென்னை இன்று கடலூரில் நடந்த  ரயில் விபத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று கடலூர்-ஆலப்பாக்கம் இடையே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தபோது, வழியில் இருந்த ரயில்வே கேட்டை வேன் கடந்து செல்ல முயன்றபோது, அந்த வழியே விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரயில் பள்ளி வேன் மீது மோதியது. இதில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு வேனில் இருந்த குழந்தைகள் … Read more

சென்னை: இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; பக்கத்து வீட்டுக்காரர் கைது; என்ன நடந்தது?

சென்னை, கொளத்தூர் பகுதியில் 33 வயதாகும் இளம்பெண் ஒருவர் கணவரைப் பிரிந்து தன்னுடைய அம்மா, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரின் எதிர் வீட்டில் வசிப்பவர் ராஜேஷ். இவரும் மனைவியைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜேஷ், மது அருந்திவிட்டு அடிக்கடி எதிர்வீட்டில் குடியிருக்கும் இளம்பெண்ணை அவதூறாகப் பேசி வந்திருக்கிறார். அதனால் ராஜேஷுக்கும் எதிர்வீட்டில் குடியிருக்கும் பெண்ணின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் | அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து: பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது கிளினிக்கில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு (50). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். ரமேஷ்பாபு சின்னக்கடை பஜாரில் உள்ள தனது கிளினிக்கில் இரவு நேரத்தில் சிகிச்சை அளித்து வருகிறார். நேற்று இரவு 9.30 … Read more

போரை நிறுத்தியதற்கு ட்ரம்ப் மீண்டும் உரிமை கோருகிறார்; மோடி எப்போது மவுனம் கலைப்பார்? – காங். கேள்வி

புதுடெல்லி: “இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது தான்தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறி இருக்கிறார். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி எப்போது மவுனம் கலைப்பார்?” என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த மே மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த 4 நாள் போரை நிறுத்தியது நான்தான். அந்தப் போர் அணு ஆயுத … Read more

14 நாடுகளுக்கு கூடுதல் வரி; இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு: ட்ரம்ப் தகவல்

வாஷிங்டன்: ஜப்பான், தென் கொரியா உட்பட 14 நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விகிதத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு நெருக்கமாக உள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதாகக் கூறி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பதிலுக்கு அந்த நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கும் என அறிவித்தார். 30%, 40% என கூடுதல் வரி விகிதத்தை அவர் … Read more