மக்களின் தனிநபர் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: மக்கள் வாங்கும் தனி நபர் கடன்கள் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.3.9 லட்சத்தில் இருந்து ரூ.4.8 லட்சமாக அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த 11 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கியுள்ளது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அனைத்து கொள்கைகளும் முதலாளித்துவ நண்பர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் இழப்புகளை … Read more

அஜித்குமார் கொலை வழக்கில் முக்கியத் திருப்புமுனை.. புகாரளித்த பெண் மீது மோசடி புகார்

₹16 Lakh Job Scam: அஜித்குமார் மீது புகார் அளித்த பெண் மீது 2011 ஆம் ஆண்டு மே மாதம் மோசடி புகார் பதியப்பட்டது. விசாரணையில் அம்பலமாக இருக்கிறது. அஜித்குமார் மீது புகார் அளித்த நிக்கிதா மீது என்ன வழக்கு பதியப்பட்டது. இது வழக்கின் திருப்புமுனையாக உள்ளது.

இந்திய பொருட்களுக்கு 500% வரி விதிப்பு… ரஷ்யா உடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது “பொருளாதார பங்கர் பஸ்டர்களை” வீசுகிறது அமெரிக்கா…

ரஷ்யா-உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்னோடியில்லாத தாக்குதல்களை நடத்தி வருகிறார். ரஷ்யாவின் இந்த தாக்குதலை “மிருகத்தனமான மோதல்” என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இதற்காக ரஷ்யாவை தண்டிக்க திட்டமிட்டுள்ளார். யுத்த வெறி பிடித்த ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி விதிக்கும் மசோதாவை அமெரிக்கா நிறைவேற்றவுள்ளது. இந்த மசோதா குறித்து அமெரிக்க செனட்டர் லிண்ட்சே … Read more

“நீதி கிடைக்கும் வரை…” – அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அஜித்குமாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி விஜய் அஞ்சலி செலுத்தினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் தாய் மற்றும் தம்பி நவீன்குமாரை, தவெக தலைர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் நிதி உதவி அளித்தார். அப்போது அவர்களிடம் விஜய், “உங்களுக்கு எப்போதும் … Read more

நடுவானில் விலகிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் ஃப்ரேம்: விமான நிறுவனம் விளக்கம்

குருகிராம்: கோவாவில் இருந்து புனேவுக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் சட்டகம் நடுவானில் விலகியது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது விளக்கம் தந்துள்ளது ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம். ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘எஸ்ஜி1080’ விமானம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) அன்று கோவாவில் இருந்து புனே நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதன் ஜன்னலின் சட்டகம் விலகியது. அதை கவனித்த பயணி ஒருவர் வீடியோவாக … Read more

கானா சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்!

அக்ரா: ஐந்து நாடுகளுக்கான தனது பயணத்தை புதன்கிழமை (ஜூலை 2) தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, கானா நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அதிபர் ஜான் டிராமணி மஹாமா, கானா மக்கள் மற்றும் அங்கு வசித்து வரும் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜூலை 2 முதல் 9-ம் தேதி வரையில் கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டி​னா, பிரேசில் மற்​றும் நமீபியா என ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. இதன்படி அவர் … Read more

கைதியை பூட்ஸ் காலால் மிதிக்கும் போலீஸ்… தேனி காவல் நிலைய வீடியோவால் பரபரப்பு!

Theni Police Viral Video: சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணத்தை தொடர்ந்து, விசாரணை கைதி ஒருவரை தேனி போலீசார் தாக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணி திரும்ப திரும்ப செய்யும் தவறு… இந்த முறையும் இங்கிலாந்துக்கே வெற்றி – ஏன்?

India vs England Edgbaston Test: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்று பர்கிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. IND vs ENG: இந்தியா செய்த பிளேயிங் லெவன் மாற்றம் இங்கிலாந்து அணி (Team England) இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது. எனவே, இரண்டாவது போட்டிக்கும் அதே பிளேயிங் லெவனை களமிறங்கி இருக்கிறது. இங்கிலாந்து அணி இதை … Read more

14 ஏ.சி. 115 மின்விளக்குகளுடன் ₹60 லட்சம் செலவில் டெல்லி முதல்வரின் இல்லம் புதுப்பிக்கப்படுகிறது…

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்த பாஜக ரேகா குப்தா தலைமையில் ஆட்சி செய்து வருகிறது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2015 முதல் 2024 வரை தங்கியிருந்த பங்களாவை அருங்காட்சியகமாக மாற்றப் போவதாக தற்போதைய முதலவர் ரேகா குப்தா கூறிவருகிறார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல்வராக பொறுப்பேற்றது முதல் டெல்லியில் உள்ள ஷாலிமார் பாக் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஜ் … Read more

'நான் தான் நீலகிரி கலெக்டர்'-போட்டோவோடு பலருக்கும் சென்ற வாட்ஸ் அப் மெசேஜ்… அதிர்ச்சி பின்னணி!

நீலகிரி மாவட்ட ஆட்சியராக லக்ஷ்மி பவ்யா தன்னீரு பதவி வகித்து வருகிறார். முந்தைய ஆட்சியர்கள் பயன்படுத்தி வந்த அரசின் சி.யூ.ஜி கைப்பேசி எண்ணினை அரசு அலுவலுக்காக இவரும் பயன்படுத்தி வருகிறார். ஆட்சியராக கையெழுத்திட்டு பொறுப்பேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வாட்ஸ் – அப் முகப்பு படமாக ( whatsapp dp) பயன்படுத்தி வருகிறார். cyber crime இந்த நிலையில், அதே புகைப்படத்தை முகப்பாகக் கொண்ட ஒரு எண்ணில் இருந்து முக்கிய நபர்கள் பலருக்கும் வாட்ஸ் – அப் … Read more