ஆசிய கோப்பையில் இருந்து முக்கிய வீரர் விலகல்? இந்தியாவிற்கு பின்னடைவு!

அனைவரும் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆசிய கோப்பை தொடர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. செப்டம்பர் 9ம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெற வேண்டிய ஆசிய கோப்பை தொடர் UAE நாட்டில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைவரும் எதிர்பார்த்தபடி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் Aல் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு நாடுகளும் செப்டம்பர் 14ஆம் தேதி மோத உள்ளன. முதலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள பரபரப்பான சூழ்நிலை காரணமாக ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெறாது என்று கூறப்பட்டது. 

மேலும் படிங்க: பாத்ரூமில் கதறி அழுத விராட் கோலி.. 2019ல் நடந்தது என்ன?

SONY LIV POSTER FOR ASIA CUP 2025. pic.twitter.com/WaEfblWKuM

— Johns. (@CricCrazyJohns) July 31, 2025

இருப்பினும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இருநாட்டு கிரிக்கெட் வாரியத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது UAE நாட்டில் போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 8 நாடுகள் இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளன. குரூப் ஏ வில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ மற்றும் ஓமன் நாடுகள் இடம் பெற்றுள்ளது. குரூப் பியில் ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. டி20 ஃபார்மெட்டில் இந்த முறை ஆசிய கோப்பை நடைபெற உள்ளது. 

இந்திய அணியில் மாற்றம் 

தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் பும்பராவிற்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரிலும் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து தொடர் முடிந்ததும் அடுத்ததாக இந்திய அணி ஆசிய கோப்பையில் தான் விளையாட உள்ளது.  இதற்கிடையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் வீரர்களுக்கு ஓய்வு உள்ளது. இருப்பினும் பணிச்சுமை காரணமாக இங்கிலாந்து தொடரில் விளையாடிய பந்துவீச்சாளர்களுக்கு ஆசிய கோப்பையில் இருந்து ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

பும்ரா நேரடியாக அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் இந்திய அணி முன்னணியில் இருக்க பும்ரா கண்டிப்பாக தேவை. எனவே அவர் ஆசிய கோப்பையில் விளையாடாமல் நேரடியாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடலாம்” என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. “ஒருவேளை ஆசிய கோப்பை தொடரில் பும்ரா விளையாடினால் நிச்சயமாக அவரால் மேற்கு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது. இருப்பினும் இறுதி முடிவை அஜித் அகர்கர் மற்றும் கௌதம் கம்பீர் தான் எடுப்பார்கள்” பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் படிங்க: இனி பும்ரா டெஸ்ட்டில் விளையாடா மாட்டாரா? பிசிசிஐ முடிவால் வந்த சிக்கல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.