தீரன் சின்னமலை நினைவு தினம், ஆடிப்பெருக்கு: சேலம் முழுவதும் 700 போலீஸ் பாதுகாப்பு

மேட்டூர்: தீரன் சின்னமலை நினைவு தினம், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சேலம் மாவட்டம் முழுவதும் 700 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈட்டுள்ளனர் என எஸ்.பி கௌதம் கோயல் தெரிவித்துள்ளார்.

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேட்டூர், பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதியில் காவிரி ஆற்றில் புனித நீராட ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருவார்கள். அதன்படி, அணையின் அடிவாரமான மட்டம் பகுதி , காவிரி பாலம் படித்துறை பகுதியில் குளிப்பதற்கு மட்டுமே பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆழமான பகுதியில் குளிப்பதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரியில் நீராடும் பெண்களுக்கு மட்டம் பகுதியில் தற்காலிக உடைமாற்றும் அறை நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. முனியப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வார்கள் என்பதால் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேட்டூரில் தீயணைப்பு துறையினர் 70 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுகின்றனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை மின் பணிமனை சந்திப்பில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி மற்றும் வாழப்பாடி வட்டத்தில் 24 இடங்களில் பொதுமக்கள் நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட எஸ்பி கௌதம் கோயல் மேட்டூர் பழைய காவிரி பாலம், மட்டம் பகுதி, நான்கு ரோடு பகுதியில் உள்ள காவிரி பாலம், பூலாம்பட்டி, நெடுங்குளம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மேட்டூரில் நடந்த ஆய்வின்போது, பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை குறித்து மேட்டூர் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் மற்றும் தீயணைப்பு அலுவலர் வெங்கடேஷிடம் கேட்டறிந்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது : தீரன் சின்னமலை நினைவு தினம் மற்றும் ஆடிப்பெருக்கு முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 700 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். காவிரி கரை ஓரங்களில் பொதுமக்கள் நீராட முன்னேற்போடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் ஆழமான பகுதியில் பொதுமக்கள் இறக்க வேண்டாம். காவிரி ஆற்றில் ரப்பர் படகு மூலம் தீயணைப்பு துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.