சென்னை: நகைச்சுவை நடிகர் மதன் பாப் (71) உடல்நலக் குறைவால் காலமானார். தமிழ்சினிமாவின் குணச்சித்திர நடிகர் மற்றும் காமெடி நடிகர் மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் இருந்து வந்தவர் மதன்பாப். இவர் சமீப காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் மதன்பாப் பாலு மகேந்திர இயக்கத்தில் வெளிவந்த நீங்கள் கேட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர். மதன் பாப், ஃபிரண்ட்ஸ், காவலன், மழை, தெனாலி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், வில்லன், யூத் உள்ளிட்ட படங்களில் நடித்து […]
