India vs England 5th Test: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடி வருகிறது. இத்தொடர் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொடரின் கடைசி போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி 2-1 என்ற முன்னிலையில் இருக்கும் நிலையில், இப்போட்டியை வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடி வருகிறது. மறுபக்கம் இப்போட்டியை வென்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது.
374 ரன்கள் இலக்கு
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 57, சாய் சுதர்சன் 38 ரன்களையும் எடுத்தனர். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி 247 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 64, ஹாரி புரூக் 53 மற்றும் பென் டக்கெட் 43 ரன்களையும் அடித்திருந்தனர்.
இதையடுத்து 23 ரன்கள் பின்னடைவுடன் இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 396 ரன்களை எடுத்தது. இந்த இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 118 ரன்களை எடுத்து அசத்தினார். இவருக்கு அடுத்தப்படியாக ஆகாஷ் தீப் 66, ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 53 ரன்களையும் அடித்தனர். இந்த நிலையில், 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி நேற்று இரவு களம் இறங்கி விளையாடி வருகிறது. நாள் முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.
லீட்ஸ் போட்டியின் ரிப்ளேவை இருக்கும்
Josh Tongue: இப்போட்டி நடக்கும் ஓவல் மைதானத்தில் வரலாற்றில் எந்த அணியும் 270+ ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்ததில்லை. ஆனால் 374 ரன்கள் தங்களுக்கு எளிதான் இலக்கு என இங்கிலாந்து அணியின் வீரர் ஜோஸ் டங் பேசி உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இப்போட்டி லீட்ஸ் போட்டியில் ரிப்ளேவாக இருக்கும். அந்த ரன்களை நாங்கள் மீண்டும் அடித்தால் இது எங்களுக்கு சிறந்ததாக இருக்கும். எங்களிடம் சிறந்த பேட்டிங் வரிசை உள்ளது. நான் பேட்டிங் செய்யும் நிலை ஏற்படாது என நினைக்கிறேன். ஒருவேளை அப்படியாக நிலை ஏற்பட்டால், சிறந்த பங்களிப்பை அளிப்பேன்” என கூறினார்.
மேலும், பந்து வீச்சில் தங்களுடைய செயல்பாடு குறித்தும் பேசிய அவர், இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவோம் என்ற சூழ்நிலை இருப்பதாக உறுதியாக கூறினார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் டங், இப்போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 8 விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: இன்னும் 5 வருஷம்.. ஆனால்! ஓய்வு குறித்து மனம் திறந்த எம். எஸ். தோனி!
மேலும் படிங்க: ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்தியர் – 55 ஆண்டுகளாக முறியடிக்க முடியாத சாதனை!