மாலேகான் வெடிகுண்டு வழக்கை விசாரித்த அதிகாரிகள் பிரதமர் மோடி பெயரை கூறுமாறு சித்ரவதை செய்தனர்: பிரக்யா சிங் தாக்குர்

புதுடெல்லி: மாலேகான் வெடிகுண்டு வழக்கில் பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி பெயர்களைக் கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் என்று பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மாலேகான் நகரில் உள்ள ஒரு மசூதி அருகே 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான பிரக்யா சிங் தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித், ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய், அஜய் ரகிர்கர், சுதாகர் திவேதி, சுதாகர் சதுர்வேதி மற்றும் சமீர் குர்கர்னி ஆகிய 7 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்த வழக்கை 2011-ம் ஆண்டு முதல் தேசிய புல​னாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து 3 நாட்​களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. இதில், பாஜக முன்​னாள் எம்​.பி. பிரக்யா சிங் தாக்​குர் உள்பட 7 பேரை​யும் விடுவிக்க சிறப்பு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதுகுறித்து பிரக்யா தாக்​குர் நேற்று கூறிய​தாவது: இந்த வழக்கு தொடர்​பாக என்​னிடம் போலீஸ் அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தி​ய​போது பலரின் பெயர்​களை இதில் சேர்க்​கு​மாறு வற்​புறுத்​தினர், சித்​ர​வதை செய்​தனர். பிரதமர் மோடி, முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் உள்​ளிட்​டோரின் பெயர்​களைக் கூறு​மாறு கட்​டாயப்​படுத்​தப்​பட்​டேன்.

என்​னிடம் விசா​ரணை நடத்​திய அதி​காரி​களின் நோக்​கம், என்னை சித்​ர​வதை செய்​வ​தாக இருந்​தது. நீ இந்​தப் பெயர்​களை கூறி​விட்​டால் நாங்​கள் உன்னை சித்​ர​வதை செய்​ய​மாட்​டோம். உன்னை விட்​டு​விடு​வோம் என்று தெரி​வித்​தனர்.

அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தி​ய​போது என்​னுடைய நுரை​யீரல் சவ்வு கிழிந்​தது. நான் மயக்​கமடைந்து விட்​டேன். பின்​னர் என்னை மருத்​து​வ​மனை​யில் சட்​ட​விரோத​மாக அடைத்து வைத்​திருந்​தனர். இந்த வழக்கு தொடர்​பாக பல உண்​மைக் கதைகளை நான் வெளியே சொல்​வேன். உண்மை வெளியே வரும். இவ்​வாறு பிரக்யா சிங் தாக்குர் கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.