ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதியின் இறுதிச்சடங்கு: பாகிஸ்தான் தொடர்பு அம்பலம்

புதுடெல்லி: பஹல்​காமில் தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​களில் ஒரு​வர் தாஹிர் ஹபீப். இவர் ஜம்​மு-​காஷ்மீரில் நடந்த மகாதேவ் ஆபரேஷனில் பாது​காப்பு படை​யின​ரால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். இவரது இறு​திச் சடங்கு பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அவரது கிராமத்​தில் நடை​பெற்​றது.

இதுதொடர்​பாக டெலிகி​ராம் சேனல்​களில் வெளி​யான வீடியோ மற்​றும் புகைப்​படங்​களில் முன்​னாள் பாகிஸ்​தான் ராணுவ வீரரும், லஷ்கர்​-இ-தொய்பா செயல்​பாட்​டாள​ரு​மான தாஹிர் ஹபீப்​பின் இறு​திச் சடங்​கில் ராவல்​கோட்​டில் உள்ள கை காலா கிராமத்​தைச் சேர்ந்த முதி​ய​வர்​கள் கூடி​யிருந்​தனர்.

உள்​ளூர் லஷ்கர்​-இ-தொய்பா தளபதி ரிஸ்​வான் ஹனிப் இந்த நிகழ்​வில் கலந்து கொள்ள முயன்​றபோது அப்​பகு​தி​யில் பெரும் பதற்றம் ஏற்​பட்​டது. இதிலிருந்து பஹல்​காம் தாக்​குதலில் பாகிஸ்​தானுக்கு தொடர்பு இருப்​பது உறு​திப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இறு​திச் சடங்​கின்போது, லஷ்கர் இயக்​கத்​தினர் துக்​கத்​தில் ஈடு​பட்​ட​வர்​களை துப்​பாக்​கி​யால் மிரட்​டினர், ஆனால், கிராம மக்​கள் அதற்கு கடுமை​யான எதிர்ப்பை தெரி​வித்​தனர். இந்த சம்​பவம் பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் தீவிர​வாதத்​துக்கு எதி​ராக மக்​களின் எதிர்ப்பு அதி​கரித்து வரு​வதை எடுத்​துக்​காட்​டு​வ​தாக அமைந்​தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.