ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணையமாட்டார்: டிடிவி தினகரன் நம்பிக்கை

சென்னை: ​தி​முக​வில் ஓ.பன்​னீர்​செல்​வம் இணை​ய​மாட்​டார் என அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருந்து ஓ.பன்னீர்​செல்​வம் வெளி​யேறியது அதிர்ச்​சி​யாக இருந்​தது. அந்த முடிவுக்கு அவர் தள்​ளப்​பட்டு இருக்​கக் கூடாது.

அதற்கு யார் காரணம் என்​பது உலகத்​துக்கே தெரி​யும். அவரை மீண்​டும் கூட்​ட​ணிக்​குள் கொண்​டுவர டெல்​லி​யில் உள்ள பாஜக தலை​வர்​கள் முயற்​சிக்க வேண்​டும். அவருடைய ஆதங்​கங்​கள் என்ன என்​பது எல்​லோருக்​கும் தெரி​யும். நான் அவருடன் தொடர்ந்து பேசிக் கொண்​டு​தான் இருக்​கிறேன் டெல்லி தலை​மைக்​கும் அதுகுறித்து தெரி​வித்​துள்​ளேன். எதிர்​காலத்​தில் எது வேண்​டு​ மா​னாலும் நடக்​கலாம் என ஓபிஎஸ் பேசி​யதை, அவர் கோபத்​தில் பேசி​ய​தாக நான் கருதுகிறேன்.

அவர், தன்னை அவமானப்​படுத்தி விட்​ட​தாக உணர்ந்து தனது சுயமரி​யாதை முக்​கி​யம் என்று கரு​தி​ய​தால், கோபத்​தில் சில வார்த்​தைகளை வெளி​யிடு​கிறார். இதற்கு முன் ஆர்​.எம்​.வீரப்​பன், திரு​நாவுக்​கரசர். சாத்​தூர் ராமச்​சந்​திரன், முத்​து​சாமி, கண்ணப்பன், ரகுப​தி, சேகர்​பாபு உள்​ளிட்ட பலர் திமுக​வுக்கு சென்று இருக்​கலாம். அவர்​களெல்​லாம் அமைச்​சர்​களாக இருந்தவர்கள்.

ஆனால் ஓ.பன்​னீர்​செல்​வம் 3 முறை முதல்​வர் வாய்ப்பு பெற்​றவர். என்னை பொறுத்​தவரை அவர் திமுக​வில் இணைவது என்ற முடிவை எடுக்க மாட்​டார். முதல்​வரின் உடல்​நலம் குறித்து விசா​ரிக்​க சென்​ற​தாகத்​தான் தெரி​வித்​துள்​ளார். முதல்​வரும் அவர் வந்ததற்கு நன்றி தெரி​வித்​துள்​ளார். மத்​திய உள்​துறை அமைச்​ச​ரால்​தான் தமிழகத்​தில் தேசிய ஜனநாயக கூட்​டணி வலுப்​பெற்று வரு​கிறது. அவர் போன்ற அனுபவம்​மிக்க தலை​வர்​களும், பன்​னீர்​செல்​வம் வெளி​யேறு​வார் என எதிர்​பார்த்​திருக்க மாட்​டார்​கள்.

பன்​னீர்​செல்​வத்தை மீண்​டும் எங்​கள் கூட்​ட​ணி​யில் கொண்டு வரு​வதற்​கான எல்லா முயற்​சிகளையும் டெல்லி மற்​றும் தமிழக பாஜக தலை​வர்​கள் எடுக்க வேண்​டும். ஆட்சி அதி​காரம், பொருளா​தா​ரத்தை தூக்கி எறிந்​து​விட்டு என்​னோடு நிற்​கும் தொண்டர்கள், தேர்​தலில் வெற்​றி, தோல்வி​களை எல்​லாம் தாண்டி என்​னோடு பயணிக்​கிறார்​கள். இவர்​களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்​ப​தான் செயல்​படு​வேன். ஜெயலலி​தாவுக்கு இழுக்கு ஏற்​படும் வகை​யில் அரசி​யல் செய்​யக்​கூடிய​வன் அல்ல. இவ்வாறு கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.