நகரி,
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சாமர்லகோட்டாவில் உள்ள சீதாராம காலனியை சேர்ந்த தம்பதி பிரசாத் – மாதுரி தம்பதி. இவர்களுக்கு புஷ்பாகுமாரி (வயது 7), ஜெஸ்ஸி நோவா (5) என 2 மகள்கள் இருந்தனர்.
பிரசாத் அதே பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றார். வேலை முடிந்ததும் நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை குலைநடுங்க வைத்தது. அதாவது வீட்டுக்குள் மனைவி மாதுரியும், 2 மகள்களும் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
அவர்களது தலையில் பலத்த காயம் இருந்தது. உடல்களை பார்த்து அவர் கதறி அழுதார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இதில் மாதுரியின் மார்பகங்களிலும், தொடைப்பகுதியிலும் பிளேடால் அறுக்கப்பட்ட காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். எனவே மாதுரியையும், அவரது மகள்களையும் மர்மநபர்கள் கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. எனவே இந்த கொடூர செயலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.