கர்நாடகாவில் 20 மயில்கள் ஒரே இடத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தும்கூர் மாவட்டம் மதுகிரி தாலுகாவின் மிடிகேஷி ஹோப்ளி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹனுமந்தபூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 3 ஆண் மயில்களும் 17 பெண் மயில்களும் இறந்துள்ளன. இச்சம்பவத்திற்கு அந்தப் பகுதியில் மக்காசோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் விஷம்வைத்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட வனத்துறை அதிகாரிகள், ‘இறந்த மயில்கள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அறிக்கை வந்த […]
