Agaram: "95,000 அப்ளிகேஷன்ஸ் வந்திருக்கு; ஆனா 1,800 குழந்தைகளைத்தான்…" – அகரம் மேடையில் கார்த்தி

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன், கமல்ஹாசன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஒளிபரப்பப்பட்ட காணொளியில், “அகரம் பவுண்டேஷன் மூலம் 6,378 மாணவர்கள் கல்வி பெற்றிருப்பதாகவும், அவர்களில் 4,800 மாணவர்கள் முதல் தலைமுறை மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டியிருந்தது.

அகரம் - சூர்யா
அகரம் – சூர்யா

அந்தக் காணொளியைத் தொடர்ந்து, அகரம் பவுண்டேஷனால் கல்விபெற்ற மாணவர்கள் மேடையில், “கல்வி பெற்று, வேலை பெற்று குறைந்தபட்சம் ஒருவரையாவது படிக்க வைப்போம்” என்று உறுதிமொழி ஏற்றனர்.

ட்ரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதில், பறை உள்ளிட்ட தாள கருவிகள் இசைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அகரம் பவுண்டேஷன் மாணவர்களுக்கு உதவிய கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து மேடையில் பேசிய கார்த்தி, “இது ஒரு அன்பு சார்ந்த மேடை. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் நாம், `இங்க யாருக்கும் யார் மேலயும் அக்கறையே கிடையாது, எல்லோருக்கும் எல்லோர் மேலயும் பொறாமை, சுயநலமான சமூகத்தில்தான் நாம் இருக்கிறோம்’ என்று எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

ஆனா, எங்கேயோ இருக்றவங்க, தனக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவர்கள், இன்னொருத்தவங்க நல்லா இருக்கணும்னு செஞ்சதுதான் அகரம்.

அப்படி பார்த்தால் நம்முடையது ஒரு பெரிய அன்பு சார்ந்த சமூகம் என்று இன்று நான் அழகாக உணர்கிறேன்.

கார்த்தி
கார்த்தி

ஒவ்வொரு வருஷமும் அகரம்ல எவ்வளவு அப்ளிகேஷன் வந்துச்சு நான் கேட்டுட்டே இருப்பேன்.

இதுவரைக்கும் 95,000 அப்ளிகேஷன் வந்திருக்கு. அதுல 20 ஆயிரம் பேர் வீட்டுக்கு தன்னார்வலர்கள் நேரில் சென்றிருக்கிறார்கள்.

அந்த 20,000 பேர்ல இதுவரைக்கும் 1,800 குழந்தைகளைத்தான் காப்பாற்ற முடிந்திருக்கிறது.

ஆனா இன்னும் இருட்டில் இருக்கின்ற குழந்தைகள் நிறைய இருக்கிறார்கள் எனும்போது மனசு பதறுது.

இது ஈஸியான பயணம் அல்ல. எல்லோரும் சேர்ந்து தொடர்ச்சியாக செய்வதுதான் அகரம். இதில் தன்னார்வலர்களுக்கு ரொம்ப நன்றி.

நம்ம சமூகத்துல அடுத்தவங்க நல்லா இருக்கணும்னு, படிக்கணும்னு, எத்தனையோ பேர் இன்னும் இருக்கிறார்கள் என்பதுதான் சந்தோஷமான விஷயம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.