சாய்னா நேவால் விவாகரத்து வாபஸ்? மீண்டும் முயற்சி செய்வதாக வெளியிட்ட பதிவு!

Saina Nehwal Parupalli Reuniting After Divorce : பேட்மிண்டன் விளையாட்டில் உலகில் நம்பர் 1 தரவரிசை பெற்ற ஒரு இந்திய வீராங்கனை என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் சாய்னா நேவால். இவர் இன்னொரு பேட்மின்டன் வீரரான பாருபள்ளி காஷ்யப் என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர்கள் 3 வாரங்களுக்கு முன் தாங்கள் திருமண உறவில் இருந்து பிரிந்து விவாகரத்து பெற இருப்பதாக அறிவித்தனர். 

விவாகரத்து அறிவிப்பு! 

சாய்னா நேவால்-பாருபள்ளி காஷ்யப் இருவரும் பத்தாண்டுகளுக்கு மேல் டேட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை எடுத்து தங்களது காதலை பெற்றோரிடம் தெரிவித்து அவர்களின் சம்பந்தத்துடன் 2018 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். திடீரென்று இருவரும் திவாகரத்து பெரு இருப்பதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்தனர். “நிறைய பரிசீலனைக்கு பிறகு நானும் பாருபள்ளியும் பிரிந்து வாழ செய்து இருக்கிறோம்” என்று சாய்னா நேவால் தெரிவித்திருந்தார்.

மீண்டும் இணைகின்றார்களா? 

சாய்னா நேவாலின் விவாகரத்து குறித்த செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இதை எடுத்து ரசிகர்கள் பலர் இணைய முழுவதும் இது குறித்து பேசி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில், சாய்னா நேவால் மற்றும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றனர். அதில், “சில சமயங்களில் பிரிந்து இருப்பது ஒருவரின் இருப்பதன் மதிப்பை கற்றுக்கொடுக்கின்றது. நாங்கள் மீண்டும் முயற்சிக்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

ரசிகர்கள் வாழ்த்து:
சாய்னா நேவால், பாருபள்ளியின் இந்த முடிவிற்கு, ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர், இவர்களின் காதலை தூய்மையான காதல் என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலர், இந்த முயற்சி  வெற்றியடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விவாகரத்து அறிவிப்பிற்கு பின்பு இவர்கள் இருவரும் பிரிந்திருந்த அந்த அடைப்பட்ட காலம், இவர்களுக்கு ஒன்றாக இருப்பதன் மதிப்பை உணர்த்தியிருக்கலாம் என்று சிலர் கூறி வருகின்றனர்.

சாய்னா-காஷ்யப் சாதனைகள்:

உலக தரவரிசையில் முதலிடம் பெற்று, ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவர் சாய்னா. இந்தியாவில் விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு இவர் ஒரு சிறந்த முன்னோடியாக இருந்து வருகிறார்.

சாய்னா நேவாலின் கணவர் காஷ்யப், ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளிலும், பிற சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளிலும் இந்தியாவிற்காக வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார். இவர்களின் இந்த ஒற்றுமையானது நிலைக்க வேண்டுமென்றும், விவாகரத்து முடிவில் இருந்து இருவரும் பின்வாங்க வேண்டும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.