தேர்தலில் வாக்குகள் திருட்டு உண்மையென ராகுல் காந்தி உறுதிமொழி அளிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: “ம​கா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​கு​கள் திருடப்​பட்​டது உண்​மையென உறு​தி​மொழி பத்​திரத்​தில் ராகுல் காந்தி கையெழுத்​திட்டு தரவேண்​டும் அல்​லது மன்​னிப்பு கேட்க வேண்​டும்” என்று தேர்​தல் ஆணை​யம் எச்​சரித்​துள்​ளது. டெல்லியில் உள்ள காங்​கிரஸ் தலைமை அலு​வல​கத்​தில் நேற்​று​முன்​தினம் பத்​திரி​கை​யாளர்​களை சந்​தித்து மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பேசி​னார்.

அப்​போது மகா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக.வுடன் தேர்​தல் ஆணை​யம் கூட்டு சேர்ந்து வாக்​கு​கள் திருடப்பட்டுள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின் போது மாலை 5.30 மணிக்கு மேல் வாக்குப் பதிவு வழக்கத்துக்குமாறாக அதிகரித்துள்ளது.

கர்​நாட​கா​வில் உள்ள ஒரு தொகு​தி​யிலும் வாக்​கு​கள் திருடப்​பட்​டுள்​ளன’’ என்று பகிரங்​க​மாக குற்​றம்சாட்டி அவற்​றுக்கு சில ஆதாரங்​களை திரை​யிட்டு காட்​டி​னார். இதுதொடர்​பாக கர்​நாட​கா, மகா​ராஷ்டிரா மற்​றும் ஹரி​யானா மாநிலங்​களைச் சேர்ந்த தலைமை தேர்​தல் அதி​காரி​கள் அறிக்கை வெளி​யிட்​டுள்​ளனர்.

அதில் கூறியிருப்பதாவது: வாக்​கு​கள் திருடப்​பட்​டது உண்​மை​தான் என சட்​டப்​படி உறு​தி​மொழி பத்​திரத்​தில் ராகுல் காந்தி கையெழுத்​திட்டு தரவேண்​டும். அல்​லது அபத்​த​மான குற்​றச்​சாட்​டு​களை கூறி​விட்​டேன் என்று இந்த நாட்டு மக்​களிடம் ராகுல் காந்தி மன்​னிப்பு கேட்க வேண்​டும். இந்த 2 வாய்ப்​பு​கள்​தான் ராகுல் காந்​திக்கு உள்​ளது.

மகா​ராஷ்டி​ரா, கர்​நாடகா வாக்​காளர் பட்​டியலில் முறை​கேடு, வாக்​குப் பதி​வில் முறை​கேடு போன்​றவற்றை ராகுல் காந்தி நம்பினால், உறு​தி​மொழிப் பத்​திரத்​தில் கையெழுத்​திடு​வ​தில் அவருக்கு எந்​தப் பிரச்​சினை​யும் இல்​லை. அப்​படி அவர் கையெழுத்திட​வில்லை என்​றால், அந்த ஆய்வை அவர் நம்​ப​வில்லை என்​று​தான் பொருள். அந்த சூழ்​நிலை​யில் அவர் மன்​னிப்பு கேட்​டு​தான் ஆகவேண்​டும்.

வாக்​காளர் பட்​டியலில் தவறு​தலாக சேர்க்​கப்​பட்ட பெயர்​களின் விவரங்​கள், தவறு​தலாக நீக்​கப்​பட்​ட​வர்​களின் பெயர் விவரங்​கள் அடங்​கிய உறு​தி​மொழி பத்​திரத்​தில் ராகுல் காந்தி கையெழுத்​திட வேண்​டும். அதன்​பிறகு நாங்​கள் சட்​டப்​படி தேவை​யான நடவடிக்​கைகளை எடுப்​போம்.

மேல்முறையீடு செய்யாதது ஏன்? – மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டத்​தின் கீழ் வாக்​காளர் பட்​டியல் வெளிப்​படை​யாக தயாரிக்கப்படு​கிறது. அந்த பட்​டியல் அரசி​யல் கட்​சிகளுக்கு வழங்​கப்​படு​கிறது. இந்த சூழ்​நிலை​யில், மகா​ராஷ்டி​ரா, கர்​நாடக மாநில வாக்​காளர் பட்​டியலில் தவறுகள் அல்​லது முறை​கேடு​கள் நடை​பெற்​றுள்​ள​தாக காங்​கிரஸ் கட்சி அப்​போது ஏன் மேல்​முறை​யீடு செய்​ய​வில்​லை.

அவர் அபத்​த​மான குற்​றச்​சாட்​டு​களை கூறி வரு​கிறார். எனவே, உறு​தி​மொழி பத்​திரத்​தில் கையெழுத்​திட வேண்​டும். அல்​லது மன்​னிப்பு கேட்க வேண்​டும். மேலும், ஜோடிக்​கப்​பட்ட ஆதா​ரங்​களை திரும்ப பெற வேண்​டும். இவ்​வாறு தலைமை தேர்​தல் ஆணை​யர்​கள் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது. ராகுல் காந்தி கையெழுத்​திட்டு அளிக்க வேண்​டிய உறு​தி​மொழி பத்​திரத்​தின் மா​திரியை​யும்​ அவருக்​கு தேர்​தல்​ ஆணையம்​ அனுப்​பி வைத்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.