உலக விளையாட்டு போட்டி: இந்திய வில்வித்தை வீரர் ரிஷப்புக்கு வெண்கலப்பதக்கம்

செங்டு,

உலக விளையாட்டு போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகிறது. இதில் வில்வித்தை போட்டியில் நேற்று நடந்த ஆண்கள் காம்பவுண்ட் தனிநபர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் யாதவ் 145-147 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவின் கர்டிஸ் லீ பிராட்னாக்சிடம் போராடி தோல்வி கண்டார்.

இதனால் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரிஷப் யாதவ், சக நாட்டவரான அபிஷேக் வர்மாவை சந்தித்தார். இதில் ரிஷப் 149-147 என்ற புள்ளி கணக்கில் உலகக் கோப்பை போட்டிகளில் தங்கம் வென்றவரான அபிஷேக் வர்மாவுக்கு அதிர்ச்சி அளித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

பெண்கள் காம்பவுண்ட் தனிநபர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பர்னீத் கவுர் 140-145 என்ற புள்ளி கணக்கில் அலிஜாண்ட்ரா உஸ்குயானோவிடமும் (கொலம்பியா), மதுரா தமன்கோன்கர் 145-149 என்ற புள்ளி கணக்கில் லிசெல் ஜாத்மாவிடமும் (எஸ்தோனியா) தோல்வியை தழுவினர்.

இதன் கலப்பு அணிகள் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் அபிஷேக் வர்மா- மதுரா இணை 151-154 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் மூன் யீன்- லீ என்ஹோ ஜோடியிடம் பணிந்தது. இத்துடன் இந்த பந்தயத்தில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.