சென்னை: சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில், ரூ.30.52 கோடி செலவில், 477 நீர் இறைக்கும் டிராக்டர்களை வாடகைக்கு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான டெண்டர் கோரியுள்ளது. சென்னை மாநகரம் நாளுக்கு நாள் கான்கிரீட் மயமாகி வருகிறது. மாநகராட்சியின் திட்டங்களும் கான்கிரீட் சாலை, கான்கிரீட் மழைநீர் வடிகால், கான்கிரீட் நடை பாதை என செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மழை காலங்களில் மழைநீர் நிலத்தில் ஊருவது தடுக்கப்பட்டு, நீர் தேங்கும் பகுதிகள் அதிகரித்து வருகின்றன. […]
