புதுடெல்லி,
டெல்லியில் தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட்டு, இன்று அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித்திரியும் அனைத்து தெருநாய்களையும் பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் சுப்ரீம் கோர்ட்டு கூறியதாவது: நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும். தெரு நாய் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய நிலை உள்ளதுதெருநாய்க்கடி தொடர்பான தகவலை தெரிவிக்க ஹெல்ப்லைனை ஒருவாரத்தில் அமைக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து நாய்க்கடி சம்பவங்களும் பதிவு செய்யப்படும்.
ஏதாவது ஒரு தனிநபரோ அல்லது அமைப்போ புகார் அளித்தால் 4 மணி நேரத்தில் தெருநாய்களை பிடிக்க வேண்டும். இதில் யாராவது குறுக்கீட்டு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். அவற்றை விடுவிக்கவும் கூடாது என்று தெரிவித்துள்ளது.