சென்னை: குப்பை அள்ளும் பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து, சென்னையில் உள்ள 4 மண்டல தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலையோரத்தில் இரவு பகலாக நடத்தி வரும் போராட்டம் இன்று 11வது நாளாக நீடித்து வருகிறது. இதற்கிடையில், தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு திமுக கூட்டணி கட்சியான திக, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், பாமக, நாம் தமிழர், அமுமுக மற்றும் பல தொழிற் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். […]
