தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்றிருப்பதே எங்களது வளர்ச்சி: சீமான் விளக்கம்

சென்னை: வெற்​றி, தோல்​வியை மக்​கள் தான் தீர்​மானிப்​பார்​கள் என்​றும், தேர்​தலில் 8.22 சதவீத வாக்​கு​களை பெற்​றிருப்​பதே என் வளர்ச்சி என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நீதி​மன்​றம், தேர்​தல் ஆணை​யம், வரு​மான வரித்​துறை, அமலாக்​கத்​துறை, சிபிஐ, என்ஐஏ போன்​றவை எல்​லாம் தன்​னாட்சி அமைப்​பு​கள் என்று நம்​பிக்​கொண்​டிருக்​கிறோம். ஆனால் இவை அதி​காரத்​தில் இருப்​பவர்​களின் 5 விரல்​களாக மட்​டுமே செயல்​பட்டு வரு​கின்​றன.

கடந்த நாடாளு​மன்ற தேர்​தலில் நான் ஒற்​றை​யாக நின்று 8.22 சதவீத வாக்​கு​களை பெற்​றிருக்​கிறேன். எனில் நான் வளர்த்திருக்கின்றேன் இல்​லை​யா, இந்​தி​ய அள​வில் நான் ஆட்​டத்​திலேயே இல்​லை. ஆனால் என்​னை​யும் தேடி வாக்கு செலுத்​தி, என்னை அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சி​யாக மாற்​றி​யுள்​ளனர்.
தேர்​தலில் 1.1 வாக்கு சதவீதத்​தில் இருந்து 8.22 சதவீத வாக்​கு​களை பெற்​றிருப்​பது என் வளர்ச்​சி​யாகும்.

இது​போன்று வளர்ந்து வந்த கட்சி தமிழகத்​தில் கிடை​யாது. தவெக தலை​வர் விஜய் அரசி​யலுக்கு வரு​வ​தால், எனது வாக்​கு​கள் குறைந்​து​விடும் என்​கின்​றனர். ஏன் தெரி​யு​மா, அப்​படி​யா​வது கட்​சியை கலைத்​து​விட்​டு, ஏதோ ஒரு கட்​சி​யில் கூட்​டணி சேர்ந்துவிடுவார்​கள் என்று தான். செத்​தா​லும் நான் தனி​யாக தான் செல்​வேன். தனித்து நின்​றாலும் தனித்​து​வத்​தோடு நிற்கவேண்டும். என் தனித்​து​வத்தை இழக்​க​மாட்​டேன். என் வெற்​றியை​யும், தோல்​வியை​யும் மக்​கள் தான் தீர்​மானிக்க வேண்​டும்​. இவ்​வாறு​ கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.