சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இந்த 2 வீரர்கள்.. CSK மெகா பிளான்?

Robin uthappa about csk: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி முதல் அணியாக வெளியே சென்ற நிலையில், வரும் 2026 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல திட்டம்தீட்டி வருகிறது. இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற சிஎஸ்கே அணி இப்படி கடுமையாக சொதப்பியது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. 

சஞ்சு சாம்சன் 

சென்னை அணி தோல்வியடைந்ததற்கு அவர்களது பேட்டிங் மிக மோசமாக இருந்ததுதான் காரணம். அதே சமயம் நம்ப்பிக்கை அளிக்கும் பந்து வீச்சாளர்கள் பெரிதாக இல்லாத்தாலேயே படுதோல்விகளை அடைந்தது. இந்த சூழலில் வரும் 2026 ஐபிஎல் தொடரில் பல மாற்றங்களை செய்ய இருக்கிறது. அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து வெளியேற விரும்புவதாக கூறப்படுகிறது. அவரை சென்னை அணி டிரேட் செய்ய முடிவு செய்திருப்பதாக கடந்த இரண்டு மாதங்களாகவே பேச்சு அடிப்பட்டு வருகிறது. 

எம்.எஸ்.தோனிக்கு பிறகு ஒரு திறமையாக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டராக சஞ்சு சாம்சன் இருப்பார் என்பதால், இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அந்த அணியோ சஞ்சு சாம்சனை கொடுக்க வேண்டும் என்றால் சென்னை அணியில் இருக்கும் இரண்டு வீரர்களை கேட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. 

ராபின் உத்தப்பா கருத்து 

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா இது தொடர்பாக பேசி இருக்கிறார். சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் ஒரு சிறந்த தேர்வாக இருப்பார். தோனிக்கு பிறகு அந்த இடத்தில் ஒரு திறமையான வீரரை கொண்டு வர இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆனால் அதிக விலை ஒரு தடையாக இருக்கலாம். இதற்கு ஒரு தீர்வாக சிஎஸ்கே அணியில் இருந்து இரண்டு வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் முறையில் கொடுத்து, சஞ்சு சாம்சனை வாங்கலாம் என்றார். 

அதாவது சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் விஜய் சங்கரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் கொடுக்கலாம் என உத்தப்பா யோசனை கூறினார். அதேசமயம் சென்னை சேப்பாக்கம் மைதானம் குறித்து அஸ்வினுக்கு நன்கு தெரிந்ததால், சென்னை அணிக்கு அஸ்வினை கொடுப்பது ஒரு பின்னடைவாக இருக்கலாம். ஆனால் சஞ்சு சாம்சனை வாங்கும் பட்சத்தில், சென்னை அண்க்கு எதிர்காலத்தில் ஒரு கேப்டன் கிடைத்ததுபோலும் இருக்கும் என மேலும் கூறினார். 

ராபின் உத்தப்பவின் இந்த கருத்து ரசிகர்களின் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வரும் ஐபிஎல் தொடரின் மினி ஏலம் டிசம்பரில் நடைபெற இருக்கிறது. அப்போதுதான், இதற்கான ஒரு முடிவு கிடைக்கும். அது வரை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும். 

மேலும் படிங்க: இந்த ஒரு காரணத்திற்காக தான் சஞ்சு சாம்சன் RR அணியை விட்டு வெளியேறுகிறாரா?

மேலும் படிங்க: சிஎஸ்கே அணியில் தோனியின் இடத்தை பிடிக்க போதும் 5 வீரர்கள்! யார் தெரியுமா?

 

 

 

About the Author

R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.