நாசிக்,
மராட்டியத்தின் நாசிக் மாவட்டத்தில் கோதி நகரில் வசித்து வந்தவர் தினேஷ் தேவிதாஸ் சாவந்த் (வயது 38). இவருடைய மனைவி பாக்யஸ்ரீ (வயது 33). 2013-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு திருமணம் நடந்தது.
ஆனால், 12 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், அவர்கள் இருவரும் கோதி ரெயில்வே கேட் மற்றும் பிரசித்ரே கோவிலுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்த ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்று, இகத்புரியை நோக்கி சென்ற ரெயில் ஒன்றின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று அவர்கள் இருவருடைய உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதன்பின்பு, அவர்களின் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. போலீசார், தற்செயலான மரணம் என வழக்கு பதிவு செய்து இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.