சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த புதின்: இந்தியா மரியாதைக்குரிய நாடு என புகழாரம்

புதுடெல்லி: இந்​தி​யா​வில் 79-வது சுதந்​திர தினம் நேற்று நாடு முழு​வதும் கோலாகல​மாக கொண்​டாடப்​பட்​டது. இதை முன்​னிட்டு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு மற்​றும் பிரதமர் மோடிக்​கு, ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து டெல்​லி​யில் உள்ள ரஷ்ய தூதரகம் நேற்று வெளி​யிட்ட அதி​காரப்​பூர்வ அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ரஷ்ய அதிபர் புதின் இந்​திய சுதந்​திர தின வாழ்த்​துகளை அனுப்பி உள்​ளார். அதில், குடியரசுத் தலை​வர் முர்​மு, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்​துள்​ளார். இந்​தியா தகு​தி​வாய்ந்த மரி​யாதைக்​குரிய நாடாக விளங்​கு​கிறது.

இந்​திய – ரஷ்ய உறவு மிக​வும் சிறப்​பானது, முன்​னுரிமையை அடிப்​படை​யாக கொண்​டது, பாது​காப்​புத் துறை இணைந்து செயல்பட கூடியது என்று புதின் புகழாரம் சூட்​டி​யுள்​ளார். மேலும், ரஷ்​யா​வின் நம்​பிக்​கைக்கு உரிய நட்பு நாடாக இந்​தியா உள்​ளது என்று புதின் கூறி​யிருக்​கிறார்.

சமூக பொருளா​தா​ரம், அறி​வியல், தொழில்​நுட்​பம் மற்​றும் இதர துறை​களில் இந்​தியா அங்​கீகரிக்​கப்​பட்ட வெற்​றியை பெற்றுள்ளது. உலக அரங்​கில் இந்​தி​யா​வுக்கு மிகுந்த மரி​யாதை உள்​ளது. அத்​துடன் உலகள​வில் மிக முக்​கிய​மான விவ​காரங்​களில் இந்​தியா தனது பங்​களிப்பை வழங்கி வரு​கிறது என்று புதின் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். மேலும் இரு நாடு​களின் கூட்டு முயற்சியால் ஒத்​துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்​து​வோம். இவ்​வாறு ரஷ்ய தூதரகம் கூறியுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.