ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் நடிகர் தர்ஷன், பவித்ரா கைது

பெங்களூரு /புதுடெல்லி: நடிகை பவித்ரா கவு​டாவுக்கு இன்​ஸ்​டாகி​ராமில் ஆபாச​மாக குறுஞ்​செய்தி அனுப்​பிய ரேணுகா சுவாமியை (33) கடத்தி கொலை செய்​த​தாக கடந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி கன்னட நடிகர் தர்​ஷன் (44) கைது செய்​யப்​பட்​டார். இவ்​வழக்​கில் பவித்ரா கவு​டா, தர்​ஷனின் மேலா​ளர் நாக​ராஜ் உட்பட 17 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

தர்​ஷனின் முதுகு தண்டு அறுவை சிகிச்​சைக்​காக கடந்த அக்​டோபரில் அவருக்கு இடைக்​கால ஜாமீன் வழங்​கப்​பட்​டது. இதை தொடர்ந்து கடந்த டிசம்​பரில் தர்​ஷன், பவித்ரா கவுடா உள்​ளிட்ட 7 பேருக்கு கர்​நாடக உயர்நீதி​மன்​றம் ஜாமீன் வழங்​கியது.

இதை எதிர்த்து கர்​நாடக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தது. இம்​மனு மீதான விசா​ரணை நிறைவடைந்த நிலை​யில் நீதிப​தி​கள் ஜே.பி. பர்​தி​வாலா, ஆர்​.ம​காதேவன் அமர்வு நேற்று தீர்ப்பை வெளி​யிட்​டது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: கொலை வழக்​கில் முதல் குற்​ற​வாளி​யான பவித்ரா கவு​டா, இரண்​டாவது குற்​ற​வாளி​யான தர்​ஷன் உள்​ளிட்ட 7 பேருக்கு ஜாமீன் வழங்​கியதை ஏற்க முடி​யாது.

கர்​நாடக உயர் நீதி​மன்​றம் எதன் அடிப்​படை​யில் ஜாமீன் வழங்​கியது என தெரிய​வில்​லை. விசா​ரணையை பாதிக்​கும் என்​பதை கரு​தாமல், மேலோட்​ட​மாக அவசர கதி​யில் ஜாமீன் வழங்​கப்​பட்​டுள்​ளது. எனவே கர்​நாடக உயர் நீதி​மன்​றம் வழங்​கிய ஜாமீன் ரத்து செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு தீர்ப்​பில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது. இதையடுத்து பவித்ரா கவு​டா, தர்ஷன் உள்ளிட்ட 7 பேரையும் போலீ​ஸார்​ கைது செய்த​னர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.