சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வருமானம் 2020-21ல் ரூ.49.11 கோடியாக இருந்த நிலையில், 2023-24ல் சுமார் 5மடங்கு உயர்ந்து ரூ.243.31 கோடியாக உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2022ல் 1.4 லட்சமாக நிலையில், 2023ல் 11.7 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுலா, புதுமை காணும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. புத்துணர்ச்சி அளிக்கிறது; அறிவு வளர்ச்சிக்கும், ஆற்றலின் பெருக்கத்திற்கும் துணைபுரிகிறது. நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், வேலை வாய்ப்புகள் வழங்குவதிலும் […]
