Rohit Sharma: அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சமீபத்தில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இன்னும் ஒருநாள் போட்டிகளில் இருந்து மட்டும் அவர் ஓய்வை அறிவிக்கவில்லை. 37 வயது ஆகும் ரோகித் சர்மாவின் உடற்தகுதி மீது பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அவர் ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வை அறிவிக்க வேண்டும். விரைவில் அது குறித்து அறிவிப்பை அவர் வெளியிடுவார் என கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், கிரிக்கெட் குறித்து தெரியாதவர்களே ரோகித் சர்மாவை விமர்சிக்கின்றனர் என பதிலடி கொடுத்துள்ளார். யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதி போட்டியில் ரோகித் சர்மா 83 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை பெற்றதை சுட்டிக்காட்டி பேசினார். அந்த ஒரு இன்னிங்ஸ் போதுமானது. ரோகித் சர்மாவின் தரம் என் என்பது தெரிவதற்கு. அவரது அந்த ஆட்டம், அவரால் 45 வயது வரை விளையாட முடியும் என்பதை நிரூபித்தது.
ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட பிசிசிஐ உறுதுணையாக இருக்க வேண்டும். ரோகித் சர்மாவை தினமும் 10 கிலோமீட்டர் ஓட வையுங்கள். அவர் இன்னும் 5 ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும். ரோகித் சர்மா போன்ற வீரர்கள் வைரங்கள். அவர்களை எளிதில் அணியில் இருந்து தூக்கி வீசி விடக்கூடாது. நான் கோட்ச்சாக இருந்தால், ஒதே வீரர்களை வைத்து சிறப்பான ஒரு அணியை உருவாக்குவேன் என கூறி உள்ளார். மேலும், ரோகித் சர்மா அவரது ஃபார்மை தக்க வைத்துக்கொள்ள உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். தொடர்ந்து விளையாடுவதன் மூலம் உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.
ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக பலரும் விமர்சித்து வரும் நிலையில், யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் ரோகித் சர்மாவுக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளார். அதே சமயம், ரோகித் சர்மா இன்னும் 5 ஆண்டுகள் விளையாட வேண்டும் என அவர் கூயதை ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
About the Author
R Balaji