Mahindra NU_IQ Platform – மஹிந்திரா NU_IQ பிளாட்ஃபாரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்

2027 முதல் சந்தைக்கு வரவுள்ள சர்வதேச சந்தைகளுக்கான எஸ்யூவிகளை மஹிந்திரா NU_IQ பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ளதை தொடர்ந்து இதன் அடிப்படையிலான Vision T , VIsion SXT, Vision S, Vision X  என நான்கு மாறுபட்ட கான்செப்ட்களை காட்சிப்படுத்தியுள்ளது.

3,990 மிமீ முதல் 4,320 மிமீ வரை நீளம் கொண்டு monocoque சேஸிஸ் பெற்ற இந்த புதிய NU_IQ பிளாட்ஃபாரத்தில் ICE மட்டுமல்லாமல் எலக்ட்ரிக், ஹைபிரிட் ஆகியவற்றுடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், FWD  முறையில் வழங்குவதுடன் வலதுபுற டிரைவிங், இடதுபுற டிரைவிங் சாத்தியப்படுத்தும் வகையில் மஹிந்திரா உருவாக்கியுள்ளது.

கூடுதலாக சர்வதேச கிராஷ் டெஸ்ட் சோதனைகளில் (GNCAP, BNCAP, ANCAP, EURO NCAP) 5 ஸ்டார் ரேட்டிங் பெறுவதற்கான பாதுகாப்பினை கொண்டிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட்டின் ஆட்டோமோட்டிவ் பிசினஸ் (நியமிக்கப்பட்ட) தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஆர். வேலுசாமி, NU_IQ பற்றியும் எதிர்கால SUV களுக்கான மாடல்களை பற்றி விவரித்தார், நிறுவனத்தின் SUV பாரம்பரியத்தை பராமரிக்கும் அதே வேளையில் வடிவமைப்பு மற்றும் பொறியியலுக்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது என குறிப்பிட்டார்.


mahindra nu iq platform

மஹிந்திராவின் ஆட்டோ மற்றும் பண்ணை துறைகளின் தலைமை வடிவமைப்பு மற்றும் க்ரீயேட்டிவ் அதிகாரி பிரதாப் போஸ் கூறுகையில், NU_IQ SUVகள் மஹிந்திராவின் “ஹார்ட்கோர்” வடிவமைப்பு தத்துவத்தின் மாறுபட்ட ஒரு வெளிப்படையான புதிய வடிவமைப்பு மொழியை உருவாக்கும் ‘ ‘Opposites Attract’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, எந்தவொரு நிலப்பரப்பிலும் சாகசம் செய்வதற்கு, நம்பிக்கை மற்றும் தொடர்பை மேம்படுத்தும் அனுபவங்களை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் அவர் 4 கான்செப்ட்களின் அடிப்படையில் தான் இந்த புதிய எஸ்யூவிகளின் 80 % உற்பத்தி நிலை மாடலுக்கு நெருக்கமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அறிமுகம் செய்யப்பட்ட  நான்கு கான்செப்ட்களின் 5-லிங்க் பின்புற சஸ்பென்ஷனை பெற்று எதிர்கால தார், பொலிரோ, ஸ்கார்ப்பியோ, மற்றும் XUV வரிசை மாடல்கள் அமைந்திருக்கும், மும்பையில் உள்ள மஹிந்திரா இந்தியா டிசைன் ஸ்டுடியோ மற்றும் இங்கிலாந்தின் பான்பரியில் உள்ள மஹிந்திரா அட்வான்ஸ்டு டிசைன் ஐரோப்பாவால் இணைந்து உருவாக்கப்பட்டு, சென்னையின் மஹிந்திரா ரிஷர்ச் வேலியில் பொறியியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டன.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.