வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள 2025 ஆசியக் கோப்பை டி20 தொடர், 2026 உலகக் கோப்பைக்கு ஆசிய நாடுகள் தயாராகும் முக்கிய தொடராக இருக்கும். 20 ஓவர் வடிவில் இத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில், முதல் அணியாக பாகிஸ்தான் பங்கேற்க இருக்கும் வீரர்களை அறிவித்திருக்கிறது.
பாகிஸ்தான் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர், இம்முறை அணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளனர். 2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வெற்றி தேடித்தந்த இவர்கள், சமீபத்திய கிரிக்கெட் அணிகளிடம் அதாவது ஜிம்பாப்வே, அமெரிக்காவுடன் சந்தித்த அவமானத் தோல்விகளுக்குப் பிரதான காரணமாகக் கருதப்பட்டுள்ளனர்.
புதிய தலைமையுடன் புதிய முகங்கள்
இப்போது சல்மான் ஆகா தலைமையில், பல இளம் வீரர்களுடன் ஆன அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த ஃபகார் ஜாமான், ஷாகீன் அப்ரிடி போன்ற வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் புதிய பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதில் பாபரும் ரிஸ்வானும் இல்லாமல் அந்த அணி தொடரை கைபற்றியது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை & எதிர்பார்ப்பு
இந்த நிலையில், பாகிஸ்தான் – இந்தியா போட்டி எப்போதும் உலக கிரிக்கெட்டில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார். “இந்த புதிய பாகிஸ்தான் அணிக்குத் தேவையான திறமையுமும், நல்ல அணுகுமுறையும் உள்ளது. இந்தியாவை வீழ்த்திய திறன் பாகிஸ்தான் அணிக்கு இருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் உலக கிரிக்கெட்டில் மிகவும் பெரியது. எங்களுடைய அணி எந்த எதிரணியையும் வீழ்த்தும். எங்கள் வீரர்கள் தயாராக இருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.
About the Author
R Balaji