இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் திறமை வாய்ந்த வீரர்களில் கே.எல். ராகுலும் ஒருவர். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் தொடரில் 500 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு பெரிய உதவியாக இருந்தார். இவர் கிரிக்கெட் வடிவிற்கு ஏற்றவாறு பேட்டிங் செய்யக்கூடியவராக திகழ்ந்து வரும் நிலையில், ராகுலை ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்ய வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், டி20 வடிவில் நடைபெறும் ஆசிய கோப்பையில் கே.எல். ராகுலின் பெயர் பரிசீலனையில் கூட இல்லை என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராகுல் குறித்து ஆகாஷ் சோப்ரா
இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா இது தொடர்பாக வேறு கருத்தைத் தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட் வடிவத்தில் ராகுலின் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இப்போது ஆடக்கூடிய இடம் குறைவு எனவும் அவர் கூறி இருக்கிறார்.
ராகுல் உண்மையில் சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேமே இல்லை. அவருடைய ஐபிஎல் போட்டிகளில் அடித்த ரன்கள் அதனை உறுதி செய்கின்றன. கடந்த சில முக்கிய தொடர்கள் மற்றும் போட்டிகளில் 600 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் ராகுல் தான். இருப்பினும், டி20 கிரிக்கெட்டில் சில சமயங்களில் மெதுவாக ஆடுவதாக என்ற பெயர் வந்துவிட்டது.
அந்த சிக்சரை மறக்க முடியாது
அதிரடியாக விளையாடுவது குறித்து ராகுலின் மனதில் தங்கிய நிலைதான் தடை என்று மக்கள் நினைக்கிறோம். குறிப்பாக, பும்ராவுக்கு எதிராக அவர் கவல் திசையில் அடித்த சிக்சரை அவர் மறக்க முடியாது. தற்போது இந்திய டி20 அணியில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் போன்ற பல அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள்.
அதிரடியாக அவர் விளையாட வேண்டும்
இதனால் நடு வரிசையில் ஆட இடம் இல்லாத காரணத்தாலும் ராகுல் ஆசிய கோப்பையில் விளையாட வாய்ப்பு குறைவாக உள்ளது. எனவே, ராகுல் டி20 கிரிக்கெட் வடிவத்தில் அதிரடியாக விளையாட வேண்டும். தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வீரராக விளங்கும் ராகுலுக்கு, தனக்கு ஏற்ற வடிவிலேயே ஆடுவதைத் தவிர்த்துப் போகாமல் புதிய திறன் வளர்ப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டிய கட்டாயமிருக்கிறது. அவர் எதிர்காலத்தில் டி20 அணியில் இடம் பெற சில சமயங்களில் அதிரடியாக விளையாடி வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்களும் கூறுகின்றனர்.
About the Author
R Balaji