சென்னை;’ திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. திமுக அமைச்சராக இருந்து வரும், ஐ.பெரியசாமி மீது, கடந்த அதிமுக ஆட்சியில் 2012ல் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. […]
