மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சந்திப்பு

புதுடெல்லி: சீன வெளி​யுறவு அமைச்​சர் வாங் யி நேற்று மாலை டெல்லி வந்​தடைந்​தார். பின்னர் மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கரை சந்​தித்து வாங் யி பேசி​னார்.

இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்​கு, தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவலை வாங் யி சந்​திக்கிறார். மாலை 5.30 மணி​யள​வில் பிரதமர் மோடியை அவரது இல்​லத்​தில் சீன அமைச்​சர் வாங் யி சந்​தித்து ஆலோ​சனை நடத்​தவுள்​ளார். சீனா​வின் தியான்​ஜின் நகரில் வரும் 31, செப்​டம்​பர் 1 ஆகிய தேதி​களில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் வரு​டாந்​திர உச்சி மாநாடு நடை​பெறவுள்​ளது. இதில் பங்​கேற்க பிரதமர் மோடி சீனா செல்​வார் என எதிர்​பாார்க்​கப்​படும் நிலை​யில், மோடி-​வாங் யி சந்​திப்பு முக்​கி​யத்​து​வம் பெற்​றுள்​ளது.

சந்​திப்​புக்​குப் பின்​னர் இரு​வரும் கூட்​டாக வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: இரு நாடு​களுக்​கும் இடையி​லான கருத்து வேறு​பாடு​கள் சர்ச்​சைகளாக மாறக்​கூ​டாது. அனைத்து வடிவங்​களி​லும் வரும் தீவிர​வாதத்தை எதிர்த்​துப் போராடு​வது என்​பது இரு நாடு​களின் முக்​கிய முன்​னுரிமை​யாகும். எங்​களின் பேச்​சு​வார்த்தை மூலம் இரு நாடு​களிடையே நிலை​யான கூட்​டுற​வும், எதிர்​கால நல்​லுற​வும் உரு​வாகும் என்று எதிர்​பார்க்​கிறோம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.