2025 ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொங்குகிறது. அம்மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதில், நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், யுஏஇ, ஓமன், இலங்கை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த சூழலில் இத்தொடருக்கான அணியை முதலாக பாகிஸ்தான் அறிவித்தது.
அந்த அணியில் முக்கிய வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஷ்வான் தேர்வாகவில்லை. இதையடுத்து இரண்டாவதாக இந்தியா தங்களது அணியை நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 19) வெளியிட்டது. தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் அறிவித்தார். சூயர்குமார் யாதவ் கேப்டனாக அணியை வழிநடத்த இருக்கிறார். துணை கேப்டன் பதவியை அக்சர் படேலிடம் இருந்து பறித்து சுப்மன் கில்லுக்கு அப்பதவியை அளித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு 2026 டி20 உலகக் கோப்பை நடைபெற இருப்பதால், ஆசிய கோப்பை தொடர் டி20 வடிவில் நடைபெறுகிறது. இத்தொடர் டி20 உலகக் கோப்பைக்கு ஒரு பயிற்சியாக ஆசிய அணிகளுக்கு அமையகிறது. எனவே ஆசிய கோப்பையில் இடம் பெறும் பெரும்பாலானோர் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார். இதன் காரணமாக ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வு பலரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது .
அந்த வகையில், இத்தொடருக்கான இந்திய அணியில் சில வீரர்களுக்கு இடம் கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இந்த தொடருக்கான அணியில் 15 பேர் கொண்ட வீரர்களை தாண்டி 5 பேர் ரிசர்வ் வீரர்களாக இடம் பிடித்துள்ளனர். முதன்மை அணியில் (அதாவது முதலில் குறிப்பிட்ட 15 வீரர்களில்) எவருக்கேனும் காயமோ அல்லது தொடரில் இருந்து வெளியேறினாலோ, அவர்களுக்கு பதிலாக ரிசர்வ் வீரர்களை பயன்படுத்தப்படுவர்.
இந்த நிலையில், ரிசர்வ் வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள 5 வீரர்கள் யார் யார்? என்பது குறித்து பார்க்கலாம். தொடக்க வீராக யஷஸ்வி ஜெய்ஸ்வால், விக்கெட் கீப்பராக துருவ் ஜூரேல், ஆல் ரவுண்ட்ராக வாஷிங்டன் சுந்தர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ரியான் பராக் மற்றும் வேகப்பந்து வீச்சாளராக பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், முதல் போட்டியில் செப்டம்பர் 14ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ரானா, ரிங்கு சிங். ரிசர்வ் வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, வாசிங்டன் சுந்தர், துருவ் ஜுரேல், ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
About the Author
R Balaji