திருப்பதி ஏழுமலையானை விரைவாக தரிசனம் செய்ய ஏஐ தொழில்நுட்பம்

ஹைதராபாத்: ​திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர்​.​நா​யுடு நேற்று ஹைத​ரா​பாத்​தில் செய்தியாளர்​களிடம் கூறிய​தாவது: முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆலோ​சனைப்​படி, கடப்பா மாவட்​டம், ஒண்​டிமிட்டா ஸ்ரீ கோதண்​ட​ராமர் கோயி​லில் நித்ய அன்​ன​தானம் வழங்​கப்​படு​கிறது. இதற்​காக திருப்​பதி தேவஸ்​தானம் ரூ.4 கோடி ஒதுக்​கீடு செய்​துள்​ளது.

கடந்த ஜெகன் ஆட்​சி​யில் திரு​மலை​யில் அவரது கட்​சிக்​காரர்​கள் 12 பேருக்கு ஓட்​டல்​கள் ஒதுக்​கப்​பட்​டன. இந்த ஒதுக்​கீடு ரத்து செய்​யப்​பட்​டு, இ-டெண்​டர் மூலம் ஓட்​டல்​களை ஒதுக்கி உள்​ளோம்.

ஸ்ரீவாணி அறக்​கட்​டளை தரிசன நேரத்தை மாற்றி உள்​ளோம். காலை​யில் டிக்​கெட் பெற்ற பக்​தர்​களுக்கு அன்று மாலை சுவாமி தரிசனம் கிடைத்து விடும்.

ஏழு​மலை​யானை பக்​தர்​கள் விரை​வாக தரிசனம் செய்ய ஏஐ தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​படும். இதன் மூலம் ஏழு​மலை​யானை 1 முதல் 2 மணி நேரத்​துக்​குள் பக்​தர்​கள் தரிசனம் செய்​ய​லாம். இதற்​கான ஏற்​பாடு நடை​பெற்று வரு​கிறது.

ஏழு​மலை​யான் தரிசனம், பிர​சாத விற்​பனை தொடர்​பாக சைபர் குற்​றங்​கள் நடை​பெற்று வரு​கிறது. இதனை தடுக்க திரு​மலை​யில் சைபர் செக்​யூரிட்டி லேப் தொடங்​கப்பட உள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.