3 நாட்களுக்கு மேலாக தொடரும் போக்குவரத்து ஊழியர் போராட்டம்: சென்னையில் 7 இடங்களில் நடைபெற்றது

சென்னை: பல்வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போக்​கு​வரத்து ஊழியர்​கள் தமிழகம் முழு​வதும் நடத்​திவரும் போ​ராட்​டம் நேற்றும் நடை​பெற்​றது. போக்​கு​வரத்​துக் கழகங்​களில் ஓய்வு பெற்​றவர்​களுக்கு பணப்​பலன் வழங்​கக் கோரி தமிழகம் முழு​வதும் கடந்த 18-ம் தேதி​ முதல் போக்​கு​வரத்​துத் தொழிலா​ளர்​கள் போ​ராடி வரு​கின்​றனர்.

காத்​திருப்​புப் போ​ராட்​டம், சாலை மறியல், ஆர்ப்​பாட்​டம் என பல்​வேறு வகை​களில் போ​ராடு​பவர்​களை காவல் துறை கைதுசெய்து வரு​கிறது. அந்த வகை​யில் நேற்​றும் போ​ராட்​டம் நீடித்​தது. சென்​னை​யில் தாம்பரம், வடபழனி உள்​ளிட்ட 7 பணி மனை​களில் தொழிலா​ளர்​களின் காத்​திருப்​புப் போ​ராட்​டம் நடை​பெற்​றது.

இதில் சிஐடியு போக்​கு​வரத்து சங்கத்தை சார்ந்த ஆறு​முகந​யி​னார், தயானந்​தம், துரை, பாலாஜி, சசிகு​மார் உள்​ளிட்ட பல்​வேறு நிர்​வாகி​கள் கலந்து கொண்​டனர். அவர்​கள் கூறும்​போது, “போக்​கு​வரத்து ஓய்​வூ​தி​யர்​களுக்கு வழங்​கப்பட வேண்​டிய பணப்​பலனை தீபாவளிக்கு முன்​பாக அளிக்க வலி​யுறுத்​துகிறோம்.

அல்​லது எப்​போது வழங்​கப்​படும் என்​ப​தற்​கான உத்​தர​வாதத்​தை​யா​வது அளிக்க வேண்​டும். எங்​களின் கோரிக்​கையை நிறைவேறா​விட்​டால் தீபாவளி வரை தொடர் போ​ராட்​டம் நடத்​தப்​படும்” என்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.