தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை இழுத்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தது பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். […]
