பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவைச் சேர்ந்தவர் ரெமோ எவட் பெரேரா. கல்லூரி மாணவியான இவர் தொடர்ந்து 178 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி கோல்டன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
இந்த நிலையில் இவரது சாதனையை முறியடிக்கும் வகையில் உடுப்பியைச் சேர்ந்த விதுசி தீக்ஷா என்ற இளம்பெண் 216 மணி நேரம் தொடர்ந்து பரத நாட்டியம் ஆடுகிறார். நேற்று முன்தினம் மதியம் 3.30 மணியளவில் அவர் பரதநாட்டியம் ஆட தொடங்கினார். வருகிற 30-ந் தேதி அவர் 216 மணி நேரம் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடி முடிப்பார் என்று சொல்லப்படுகிறது.
அப்படி நிகழ்ந்தால் ரெமோ எவட் பெரேராவின் சாதனை முறியடிக்கப்படும். அதுமட்டுமின்றி கோல்டன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்திலும் விதுசி தீக்ஷா இடம்பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.