இந்திய வான்பரப்பில் பாக். விமானம் பறக்க தடை நீட்டிப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க ஏப்ரல் 30 முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா மீண்டும் பாகிஸ்தான் விமானங்களுக்கான வான்வெளி மூடலை செப்டம்பர் 24-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதேபோல, பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கான வான்வெளி மூடலை செப்.24 வரை நீட்டித்துள்ளது. இது குறித்த தகவல் விமானிகளுக்கான அறிவிப்பில் (NOTAM) தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.