டெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி, நக்சல் பயங்கரவாதி களுக்கு உதவியர் என உள்துறை அமித்ஷா விமர்சனம் செய்திருந்தார். இதற்கு முன்னாள் நீதிபதிகள் 18 பேர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். துணை குடியரசுத் தலைவர் தேர்தல், வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் […]
