சாலை வசதிக்கு மத்திய அரசு விடுவித்த ரூ.2,043 கோடி எங்கே? – அண்ணாமலை கேள்வி

சென்னை: தமிழகத்​தின் சாலை வசதிக்​காக மத்​திய அரசு விடு​வித்த ரூ.2,043 கோடி எங்கே போனது என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை கேள்வி எழுப்​பி​யுள்​ளார். கோவை மாவட்​டம் வால்​பாறை அருகே உடுமன் பாறை பகு​தி​யில் சாலை வசதி இல்​லாத​தால் உடல்​நலம் பாதிக்​கப்​பட்ட முதி​ய​வரை மலை​வாழ் மக்​கள் தொட்​டில் கட்டி மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லும் வீடியோ இணை​யத்​தில் வைரலானது.

இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்டு பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை கருத்து பதி​விட்​டுள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: வால்​பாறை​யில் உள்ள உடுமன்​பாறை கிராமம் மாநிலத்​தின் பிற பகு​தியி​லிருந்து துண்​டிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் உள்ள ஒவ்​வொரு குடி​யிருப்​பும் சாலைகளால் இணைக்​கப்​பட்​டுள்​ள​தாக திமுக அரசு கூறி வரு​கிறது.

ஆனால், சாலை வசதி இல்​லாத​தால், மருத்​துவ சிகிச்​சைக்​காக முதி​ய​வர் ஒரு​வரைக் கிராம மக்​கள் தொட்​டில் கட்டி அழைத்​துச் செல்​வது இதயத்தை உடைக்​கிறது. கடந்த 4 ஆண்​டு​களில் தமிழகத்​தின் சாலை வசதிக்​காக மத்​திய அரசு விடு​வித்த ரூ.2,043 கோடி எங்கே போனது? இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.